• Sep 30 2024

40 குழந்தைகளையும் சிறுவர்களையும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்த ஹமாஸ் ஆயுதக்குழு! samugammedia

Tamil nila / Oct 11th 2023, 8:37 pm
image

Advertisement

இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள், இஸ்ரேல் கிராமம் ஒன்றிலிருந்த குடும்பங்களை, குழந்தைகளைக் கூட விட்டுவைக்காமல் முற்றிலுமாக கொன்று குவித்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் ஆயுதகுழுவினர், காசா எல்லையை ஒட்டி அமைந்துள்ள Kfar Aza என்னும் கிராமத்தை இரண்டு நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார்கள்.

அந்த இரண்டு நாட்களும், 20 நிமிடத்துக்கொருமுறை வீடு வீடாக நுழைந்து, வீட்டுக்குள்ளிருந்தவர்களை கொடூரமாக படுகொலை செய்துள்ளார்கள் 

ஆண்கள், பெண்கள் என ஒருவரையும் விட்டுவைக்காமல், கொடூரமாக அனைவரையும் கொன்று குவித்துள்ளார்கள் .

இந்நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமையன்று அந்த கிராமத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.

ஆனால், கிராமத்துக்குள் நுழைந்த ராணுவ வீரர்களை சக வீரர்கள் தேற்றும் நிலையே அங்கு காணப்பட்டது. ஆண்கள் பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் சடலங்களாக கண்ட இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கலங்கிப்போனார்கள்.

குழந்தைகள், சிறுவர்கள் மட்டுமே 40 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், அவர்களில் சில குழந்தைகள் மற்றும் பெண்களுடைய தலைகள் வெட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

சிலர் தலையில் சுடப்பட்டிருந்தார்கள், சில குடும்பங்கள் மொத்தமாக உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைத் தளபதிகளில் ஒருவரான Major General Itai Veruv, தன் வாழ்நாளில் தான் இதுபோல் ஒரு கொடூரத்தைக் கண்டதில்லை என்றும், குழந்தைகளும், அவர்களுடைய தாய்மார்களும், தந்தைகளும், தங்களுக்கு பாதுகாப்பு என நம்பிய தங்கள் வீடுகளுக்குள்ளேயே கொல்லப்பட்டுள்ளார்கள். இது போர் அல்ல, இது படுகொலை என்றும் கூறியுள்ளார். 

40 குழந்தைகளையும் சிறுவர்களையும் ஈவிரக்கமின்றி படுகொலை செய்த ஹமாஸ் ஆயுதக்குழு samugammedia இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள், இஸ்ரேல் கிராமம் ஒன்றிலிருந்த குடும்பங்களை, குழந்தைகளைக் கூட விட்டுவைக்காமல் முற்றிலுமாக கொன்று குவித்துள்ளனர்.கடந்த சனிக்கிழமை இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் ஆயுதகுழுவினர், காசா எல்லையை ஒட்டி அமைந்துள்ள Kfar Aza என்னும் கிராமத்தை இரண்டு நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார்கள்.அந்த இரண்டு நாட்களும், 20 நிமிடத்துக்கொருமுறை வீடு வீடாக நுழைந்து, வீட்டுக்குள்ளிருந்தவர்களை கொடூரமாக படுகொலை செய்துள்ளார்கள் ஆண்கள், பெண்கள் என ஒருவரையும் விட்டுவைக்காமல், கொடூரமாக அனைவரையும் கொன்று குவித்துள்ளார்கள் .இந்நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமையன்று அந்த கிராமத்தை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது இஸ்ரேல் ராணுவம்.ஆனால், கிராமத்துக்குள் நுழைந்த ராணுவ வீரர்களை சக வீரர்கள் தேற்றும் நிலையே அங்கு காணப்பட்டது. ஆண்கள் பெண்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் சடலங்களாக கண்ட இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கலங்கிப்போனார்கள்.குழந்தைகள், சிறுவர்கள் மட்டுமே 40 பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில், அவர்களில் சில குழந்தைகள் மற்றும் பெண்களுடைய தலைகள் வெட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.சிலர் தலையில் சுடப்பட்டிருந்தார்கள், சில குடும்பங்கள் மொத்தமாக உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டிருந்தன.இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைத் தளபதிகளில் ஒருவரான Major General Itai Veruv, தன் வாழ்நாளில் தான் இதுபோல் ஒரு கொடூரத்தைக் கண்டதில்லை என்றும், குழந்தைகளும், அவர்களுடைய தாய்மார்களும், தந்தைகளும், தங்களுக்கு பாதுகாப்பு என நம்பிய தங்கள் வீடுகளுக்குள்ளேயே கொல்லப்பட்டுள்ளார்கள். இது போர் அல்ல, இது படுகொலை என்றும் கூறியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement