வறுமைக்கோட்டில் உள்ள குடும்பத்திற்கு இராணுவத்தினரால் வீடு கையளிப்பு

106

வறுமைக்கோட்டில் உள்ள குடும்பத்திற்கு இராணுவத்தினரால் கட்டிய வீடு கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரில் இவ்வாறு படையினரால் வீடு முழுமையாக்கப்பட்டு இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

குறித்த கையளிப்பு நிகழ்வு இன்று பகல் 1 மணியளவில் இடம்பெற்றது. இதன்போது, குறித்த பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டு இடை நடுவில் கைவிடப்பட்டிருந்த வீடு இராணுவத்தினரின் நிதி மற்றும், ஆளணியுதவியுடன் பூரணப்படுத்தப்பட்டு இன்றைய தினம் கையளிக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய கலந்துகொண்டு வீட்டினை கையளித்ததுடன், அன்பளிப்பு பொருட்களையும் வழஙிகியிருந்தார். தொடர்ந்து மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டன.

இதேவேளை குறித்த நிகழ்வில் 72வது இராணுவ தினத்தையொட்டி 20 குடும்பங்களிற்கு 2000 ரூபா பெறுமதியான உலருணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு இராணுவதலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் SPAK பிலபிரிலய , 55வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எம்.கே.ஜயவர்த்தன, பிரதேச செயலக அதிகாரிகள், கிராம சேவையாளர், இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: