• Apr 20 2024

கோழி இறைச்சி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்- பாரியளவில் குறைவடையும் கோழி இறைச்சியின் விலை! samugammedia

Tamil nila / Jun 10th 2023, 7:16 pm
image

Advertisement

கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று மாதங்களுக்குள் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை 1,200 ரூபாவாக குறைக்க முடியும்  என கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் தகவல் வெளியிட்டது.

இதன் காரணமாக  விவசாயத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 1,300 ரூபாவு வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ரூபாவின்  பெறுமதி அதிகரிப்பின் பலன் நுகர்வோருக்கு இந்த விலையை குறைப்பதற்கு அமைச்சுடன் இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த கலந்துரையாடலின் போது, ​​டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையின் பயனை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்தொழிலைப் பாதுகாக்க அரசாங்கம் தேவையான சலுகைகளை வழங்கிய போதிலும் நுகர்வோருக்கு நன்மைகள் கிடைக்கவில்லை  எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


கோழி இறைச்சி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்- பாரியளவில் குறைவடையும் கோழி இறைச்சியின் விலை samugammedia கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் சந்தையில் முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.மூன்று மாதங்களுக்குள் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியை 1,200 ரூபாவாக குறைக்க முடியும்  என கோழிப்பண்ணை உற்பத்தியாளர்கள் தகவல் வெளியிட்டது.இதன் காரணமாக  விவசாயத் துறை அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.தற்போது ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் விலை 1,300 ரூபாவு வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.ரூபாவின்  பெறுமதி அதிகரிப்பின் பலன் நுகர்வோருக்கு இந்த விலையை குறைப்பதற்கு அமைச்சுடன் இணக்கப்பாட்டுக்கு வர முடியும் என அமைச்சருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இந்த கலந்துரையாடலின் போது, ​​டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையின் பயனை நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோழிப்பண்ணை உரிமையாளர்களிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.இத்தொழிலைப் பாதுகாக்க அரசாங்கம் தேவையான சலுகைகளை வழங்கிய போதிலும் நுகர்வோருக்கு நன்மைகள் கிடைக்கவில்லை  எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

Advertisement

Advertisement