ஐ.பி.எல் போட்டிகளில் வனிந்து ஹசரங்கா, துஷ்மந்த சமீரா

294

ஐ.பி.எல் 2021 போட்டிகளில் விராட் கோலி தலைமையிலான ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் துஷ்மந்த சமீரா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல் – 2021 போட்டிகள் கொரோனா தொற்று அதிகரிப்பால் காலவரையின்றி நிறுத்தப்பட்டது.

எஞ்சிய போட்டிகளை செப்டம்பர் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இறுதிப் போட்டி அக்டோபர் 15 ஆம் திகதி அன்று நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி20 பந்துவீச்சு தரவரிசையில் 2 ஆவது இடத்தில் உள்ள வனிந்து ஹசரங்கா மற்றும் இந்திய – இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடிய துஷ்மந்த சமீரா ஆகியோர் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: