இந்த தொல்லையால் கடுமையாக அவதிப்படுகிறீர்களா? இதோ தீர்வு!!

403

இன்று மூச்சுக்குத்து எனப்படும் வாய்வுப் பிடிப்புத் தொல்லையால் பலர் அவதிப்படுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதற்கு தீர்வு காணமுடியாமல் உடம்பை வளைத்து நெளித்து வாய்வைப் போக்காட்டும் செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

வாய்வுப் பிடிப்பு எனப்படுவது நாம் உண்ணும் உணவினாலேயே ஏற்படுகின்றது. வாய்வை உற்பத்திசெய்கின்ற உணவு வகைகளை நாம் அதிகமாக உண்ணும்போது இவை சமிபாட்டுத் தொகுதியில் வாய்வை அதிகமாக உற்பத்திசெய்கின்றன. காரமான அமிலமான மற்றும் எண்ணெய்த்தன்மையுள்ள உணவுகளை அடிக்கடி எடுக்கும்போது வாய்வு எல்லை மீறுகின்றது. இதன்போது சமிபாட்டுத் தொகுதியில் வாய்வை பிரித்தெடுக்கும் செயன்முறை நடைபெறுவதால் ஏப்பம் மூலமும் (மேலே) அபானன் மூலமும் (கீழே) வாய்வு பிரிவடைந்து வெளியேறுகின்றது.

சிலவேளைகளில் வாய்வைப் பிரித்தெடுத்து வெளியேற்றும் செயன்முறை மந்தகதியில் இடம்பெற்றால் பெருமளவான வாய்வுகள் எமது உடலெங்கும் பரவுகின்றன. இவை முதுகு நெஞ்சு போன்ற பகுதிகளில் தேங்கும்போது பெரும் அசௌகரியமான உணர்வை ஏற்படுத்துவதுடன் சிலருக்கு வலியையும் ஏற்படுத்துகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் வாய்வின் எதிரியாக விளங்கு வெள்ளைப் பூண்டை பயன்படுத்தவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பூண்டை நெருப்பில் அல்லது வெப்பத்தில் வாட்டிவிட்டு அதனை அப்படியே எடுத்து சாப்பிடவேண்டும். பின்னர் கதகதப்பான நீரை பருகவேண்டும். இப்படிச் செய்தால் உடனடியாக வாய்வுப் பிடிப்பு நின்றுவிடும். உடனடி நிவாரணத்திற்கு இந்த முறையே சித்த மருத்துவத்தில் செய்யப்படுகின்றது. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: