உங்கள் பின்னால் துரத்திவரும் மிகப்பெரிய ஆபத்து ஒன்றைத் தெரியுமா?

168

40 வயதைத் தாண்டியவர்கள் வருடத்தில் இரண்டு தடவைகளாவது தங்களுடைய குருதி அமுக்கத்தை ( Pressure ) அளந்து கொள்ளுவது மிகவும் முக்கியமானது என்று யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மனிதர்களுக்கு தொடர்ச்சியான அதிகரித்த உயர் குருதி அமுக்கம் அல்லது அழுத்தம் இருந்தால் மூளையில் இரத்தப் பெருக்கு ஏற்படுவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி மாரடைப்பு, நீண்டநாள் சிறுநீரக செயலிழப்பு மற்றும் பல உடல் வியாதிகளை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதவிர ஏற்கனவே குருதி அழுத்தத்திற்கு மருந்துகளை உட்கொள்பவர்கள் அவற்றை கிரமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ள வைத்தியர், சிலர் திடீரென மேற்படி மருந்துகளை உட்கொள்ளாத சந்தர்ப்பத்தில் திடீரென அதிகரித்த உயர் குருதி அமுக்கத்தினால் பாரிய விளைவுகள் ஏற்பட்டு சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட நிகழ்கின்றன என்கிறார்.

எனவே எமது பகுதிகளில் இருக்கின்ற அனைவரும் குருதி அமுக்கத்தை தங்களுக்கு அருகில் இருக்கின்ற வைத்திய நிலையம் ஒன்றில் பரிசோதித்து கொள்ளுவது மிகவும் முக்கியமானது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.