• Mar 28 2023

பல பாகங்களில் இன்று பலத்த மழை!

Tamil nila / Jan 27th 2023, 7:22 am
image

Advertisement

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று (27) அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பல தடவைகளில் மழை பெய்யக்கூடும்.

அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரை பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.

பல பாகங்களில் இன்று பலத்த மழை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இன்று (27) அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேலும், ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் பல தடவைகளில் மழை பெய்யக்கூடும்.அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரை பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.

Advertisement

Advertisement

Advertisement