• Mar 30 2024

செவிப்புலன் அற்றோரின் திறமைகளுக்கு ஏற்ப அவர்கள் முன்னேறிச் செல்வதற்கு உதவிகளை மேற்கொள்ள வேண்டும்- மன்னார் ஆயர் வேண்டுகோள்!

Sharmi / Dec 7th 2022, 3:47 pm
image

Advertisement

செவிப்புலன் அற்றோர் என்பதற்காக அவர்களை ஒதுங்கி விடாது அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப அவர்கள் முன்னேறிச் செல்வதற்கு அவர்களின் பெற்றோர் கட்டாயம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு அமைப்பு ஏற்பாடு செய்த வருடாந்த நத்தார் விழா இன்று புதன்கிழமை (7) காலை 11 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னாரில் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு அமைப்பினால் இவ்வாறானதொரு நிகழ்வு நடாத்தப்படுகின்றமையை ஒட்டி மகிழ்ச்சி அடைகின்றோம்.

கிறிஸ்து பிறப்பின் ஆயத்தமாக நாங்கள் நடத்துகின்ற ஒளி விழா இயேசு நாதருடைய ஒளி உங்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்றும், நீங்கள் செவிப்புலன் இல்லாமல் இருந்தாலும்,உங்களுக்கு இறைவன் பல்வேறு திறமைகளை தந்துள்ளார்.


உங்களால் எத்தனையோ காரியங்கள் செய்யக்கூடியதாக உள்ளது.அதற்கு நாங்கள் இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம்.

எனவே   செவிப்புலன் அற்றோர் என்பதற்காக அவர்களை ஒதுங்கி விடாது அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப அவர்கள் முன்னேறிச் செல்வதற்கு அவர்களின் பெற்றோர் கட்டாயம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

தமக்கு எதுவும் கேட்கவில்லை அல்லது விளங்கவில்லை என்று சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி இருந்தால் உங்களுக்கு செய்யக்கூடிய எத்தனையோ காரியங்கள் செய்ய முடியாது போய்விடும்.

எனவே அவர்களின் திறமைகளை ஊக்குவித்து அவர்களுக்கு எந்த விதத்திலும் நல்வழி காட்டக்கூடிய அமைப்புகளின் ஊடாக அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரக்கூடிய சூழ்நிலை உள்ளது.

-எனவே நாங்கள் இந்த ஒளி விழாவில் கலந்து கொண்டு செவிப்புலன் அற்ற ஒவ்வொருவருக்கும் இறை ஆசீர் கிடைக்க வேண்டும் என்றும், அவர்கள் எங்களிடம் முன்வைத்த கோரிக்கைகளை மன்னார் மறைமாவட்டம்  என்ற ரீதியில் அவர்களுக்கு உதவிகள் மேற்கொண்டு, அவர்களின் வாழ்வு உயர்ந்து செல்ல எங்களால் முடிந்த உதவிகளை மேற்கொண்டு அவர்கள் முன்னேறிச் செல்ல உதவிகளை மேற்கொள்வோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லிடிமேல் கலந்து கொண்டார்.

இதன் போது நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,விருந்தினர்களினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

செவிப்புலன் அற்றோரின் திறமைகளுக்கு ஏற்ப அவர்கள் முன்னேறிச் செல்வதற்கு உதவிகளை மேற்கொள்ள வேண்டும்- மன்னார் ஆயர் வேண்டுகோள் செவிப்புலன் அற்றோர் என்பதற்காக அவர்களை ஒதுங்கி விடாது அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப அவர்கள் முன்னேறிச் செல்வதற்கு அவர்களின் பெற்றோர் கட்டாயம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார்.மன்னார் மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு அமைப்பு ஏற்பாடு செய்த வருடாந்த நத்தார் விழா இன்று புதன்கிழமை (7) காலை 11 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,,,மன்னாரில் செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு அமைப்பினால் இவ்வாறானதொரு நிகழ்வு நடாத்தப்படுகின்றமையை ஒட்டி மகிழ்ச்சி அடைகின்றோம்.கிறிஸ்து பிறப்பின் ஆயத்தமாக நாங்கள் நடத்துகின்ற ஒளி விழா இயேசு நாதருடைய ஒளி உங்கள் அனைவருக்கும் கிடைக்கப்பெற வேண்டும் என்றும், நீங்கள் செவிப்புலன் இல்லாமல் இருந்தாலும்,உங்களுக்கு இறைவன் பல்வேறு திறமைகளை தந்துள்ளார்.உங்களால் எத்தனையோ காரியங்கள் செய்யக்கூடியதாக உள்ளது.அதற்கு நாங்கள் இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம்.எனவே   செவிப்புலன் அற்றோர் என்பதற்காக அவர்களை ஒதுங்கி விடாது அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப அவர்கள் முன்னேறிச் செல்வதற்கு அவர்களின் பெற்றோர் கட்டாயம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.தமக்கு எதுவும் கேட்கவில்லை அல்லது விளங்கவில்லை என்று சமுதாயத்தில் இருந்து ஒதுங்கி இருந்தால் உங்களுக்கு செய்யக்கூடிய எத்தனையோ காரியங்கள் செய்ய முடியாது போய்விடும்.எனவே அவர்களின் திறமைகளை ஊக்குவித்து அவர்களுக்கு எந்த விதத்திலும் நல்வழி காட்டக்கூடிய அமைப்புகளின் ஊடாக அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரக்கூடிய சூழ்நிலை உள்ளது.-எனவே நாங்கள் இந்த ஒளி விழாவில் கலந்து கொண்டு செவிப்புலன் அற்ற ஒவ்வொருவருக்கும் இறை ஆசீர் கிடைக்க வேண்டும் என்றும், அவர்கள் எங்களிடம் முன்வைத்த கோரிக்கைகளை மன்னார் மறைமாவட்டம்  என்ற ரீதியில் அவர்களுக்கு உதவிகள் மேற்கொண்டு, அவர்களின் வாழ்வு உயர்ந்து செல்ல எங்களால் முடிந்த உதவிகளை மேற்கொண்டு அவர்கள் முன்னேறிச் செல்ல உதவிகளை மேற்கொள்வோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.குறித்த நிகழ்வில் விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லிடிமேல் கலந்து கொண்டார்.இதன் போது நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,விருந்தினர்களினால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement