Wednesday, May 18, 2022

உடலுக்கு நன்மையளிக்கும் மூலிகைத் தேநீர்!

இன்றைய உலகில் தினந்தோறும் புதிய புதிய வியாதிகளால் மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

அந்த வகையில் வியாதிகள் உருவாகுவதற்கு நாம் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாக அமைகின்றோம் .

எமது உணவுப்பழக்க வழக்கங்கள் மற்றும் நாம் வசிக்கும் புறச்சூழலின் நிலைமைகளும்  வியாதிகளுக்கு காரணமாக அமைகின்றது.

அந்தவகையில் எமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மூலிகை தேநீர் தொடர்பில் ஆராய்வோம்.

செம்பருத்திப்பூ தேநீர்:  ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு  வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

ஆவாரம் பூ தேநீர்: காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் டீ சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

கொத்தமல்லி தேநீர்: கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

முருங்கைக் கீரை தேநீர்: முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை தேநீர் தயார்.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

Viber

அதிகம் படித்தவை