சுமார் 40 வருடகாலமாக கண்காணிப்பின்றி காணப்படும் நெடுஞ்சாலை

223

பொல் பிட்டிய – ஹங்ராம் பிட்டிய பகுதியில் உள்ள பிரதான நெடுஞ்சாலை 40 வருட காலமாக செப்பனிடப்படாமல் கண்காணிப்பின்றி காணப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நுவரெலியா மாவட்ட அம்பகமுவ செயலாளர் பிரிவுக்கு உரித்தான கொத்தலேன, பொல்பிட்டிய மற்றும் ஹட்டன் கொழும்பு பிரதான சாலை கலுகல வரையுள்ள நெடுஞ்சாலையை செப்பனிட்டு தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், குறிப்பிட்ட பகுதியில் ஆறு வணக்கஸ்தலங்கள், ஐந்து பாடசாலைகள் மற்றும் அரச காரியாலயங்கள் என்பன காணப்படுகின்ற காரணத்தினால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இவ்வாறு பழுதடைந்துள்ள வீதியின் ஊடாக பொல்பிட்டிய, மாதெனிய, கிட்டிகேகம, ஹங்கராம் பிட்டிய, ஜம்புதென்ன, கொத்தலேன, திபட்டன் ஆகிய கிராம சேவகர் பிரிவு மக்கள் அன்றாடம் பயணிக்கவேண்டிய நிலையில் உள்ளனர்.

அதன்படி, சுமார் 2000 ம் மேற்பட்டவர்கள் இந்த வீதியையே உபயோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், குறித்த பிரதேசத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் முன்வந்து இவ் வீதியை செப்பனிட்டு தருமாறு அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: