யுத்தத்தின் கொடூரத்தை உணர்த்திய ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நாள் !

உலக அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் போரின் காயங்களும் வடுக்களும் என ஜப்பான் தனது எட்டு தசாப்த கால வலி நிறைந்த நாளின் துக்கத்தை அனுசரிக்கிறது

குறிப்பாக உலக அமைதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் போரின் காயங்களும் வடுக்களும் என ஜப்பான் தனது எட்டு தசாப்த கால வலி நிறைந்த நாளின் துக்கத்தை அனுசரிக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் புதிய ஆயுதப் போட்டிக்கு அஞ்சும் சர்வதேச நாடுகளின் கவலைகளுக்கு மத்தியில் ஹிரோஷிமாவில் உலகின் முதல் அணுகுண்டு தாக்குதலின் 77 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் அஞ்சலி நிகழ்ச்சிகள் அனுசரிக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 6, 1945 அன்று காலை 8:15 மணிக்கு, அமெரிக்காவின் B-29 போர் விமானம் எனோலா கே, “லிட்டில் பாய்” என்ற புனைப்பெயர் கொண்ட குண்டை வீசி ஹிரோஷிமா நகரத்தை அழித்தது. அந்த அணுகுண்டு தாக்குதலை அனுசரிக்கும் வகையில், ஹிரோஷிமாவில் மணிகள் ஒலிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதற்கமைய, பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த நிலையில், நேற்று உக்ரேனிய அணுமின் நிலையத்தின் மீது ஷெல் துப்பாக்கி தாக்குதல் நடைபெற்றது. இது, உலகின் முதல் அணுகுண்டு தாக்குதல் நடைபெற்றதை அதிகம் நினைவுபடுத்துவதாக உள்ளது.

1945 ஆம் ஆண்டு இறுதிக்குள் 1,40,000 பேரை பலிவாங்கிய குண்டுவெடிப்பின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஹிரோஷிமா நகரத்தின் மையத்தில் உள்ள அமைதிப் பூங்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். அவர்களுடன் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெசும் கலந்து கொண்டார்.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை