மகா வம்சத்துடன் நாம் அறிந்த வரலாற்றில் பெரிய வித்தியாசம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க வேண்டும். நாம் வரலாற்றை மறந்துவிடுகிறோம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வரலாறு குறித்த அறிவையும், ஆராய்ச்சியையும் முன்னெடுப்பதற்காக இந்த நிறுவனம் செயற்பட வேண்டும். மகா வம்சத்துடன் நாம் அறிந்த வரலாற்றில் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
மகா வம்சத்தில் உள்ள திகதிகளை மாற்ற முடியாது. மகா வம்சத்திலும் ஒரு தரப்பினரின் கருத்துக்களே இருக்கின்றன. வெளியே வேறு கருத்துக்களும் இருக்கின்றன.
இவற்றை கருத்திற்கொண்டு இலங்கை வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவத் தயார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள், மாவட்டத்தின், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன், ஏனைய நிறுவனங்கள் அடங்கியதே மாவட்ட அபிவிருத்திச் சபையாகும்.
மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவுவதன் மூலம் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்றும், அதன்மூலம் பாரியளவான பணத்தை சேமிக்க முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் வரலாற்று ஆய்வு நிறுவனம் மகா வம்சத்துடன் நாம் அறிந்த வரலாற்றில் பெரிய வித்தியாசம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க வேண்டும். நாம் வரலாற்றை மறந்துவிடுகிறோம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.எனவே, வரலாறு குறித்த அறிவையும், ஆராய்ச்சியையும் முன்னெடுப்பதற்காக இந்த நிறுவனம் செயற்பட வேண்டும். மகா வம்சத்துடன் நாம் அறிந்த வரலாற்றில் பெரிய வித்தியாசம் இருக்கிறது.மகா வம்சத்தில் உள்ள திகதிகளை மாற்ற முடியாது. மகா வம்சத்திலும் ஒரு தரப்பினரின் கருத்துக்களே இருக்கின்றன. வெளியே வேறு கருத்துக்களும் இருக்கின்றன.இவற்றை கருத்திற்கொண்டு இலங்கை வரலாற்று ஆய்வு நிறுவனமொன்றை ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவத் தயார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.தற்போதுள்ள மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள், மாவட்டத்தின், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன், ஏனைய நிறுவனங்கள் அடங்கியதே மாவட்ட அபிவிருத்திச் சபையாகும்.மாவட்ட அபிவிருத்திச் சபைகளை நிறுவுவதன் மூலம் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்றும், அதன்மூலம் பாரியளவான பணத்தை சேமிக்க முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.