• Apr 25 2024

ஓசோன் படலத்தில் காணப்படும் ஓட்டை - 20 ஆண்டுகளில் ஏற்படவுள்ள மாற்றம்!

Chithra / Jan 11th 2023, 7:51 am
image

Advertisement

பூமியின் மேற்பரப்பில் ஓசோன் படலத்தில் காணப்படும் ஓட்டை அடுத்த 20 ஆண்டுகளில் சீராகும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் படலமான ஓசோனில் காற்றில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஓட்டை வீழ்ந்தது.


இதனால் சூரியனில் இருந்து வெளியாகும் நச்சுக்கதிர்களால் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு மனித குலம் பெரும் பாதிப்படைந்து எதிர்நோக்கி வருகின்றது.

இந்நிலையில், தற்போது வளி மண்டல அடுக்கை அழிக்கும் வான்வழி இரசாயனங்கள் குறைந்து வருகின்றது.


இதன் காரணமாக 20 ஆண்டுகளுக்குள் ஓசோன் படலம் சீராகும் என்றும் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டம் தொடர்பான அமைப்பின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒசோன் படத்தில் உண்டான துளை மெல்ல மெல்லச் சரியாகி வருவதாக ஐ.நா சபை தகவல் தெரிவித்துள்ளது.


குறிப்பாக, ஒசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அண்டார்டிகாவுக்கு மேலே ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளை சுருங்கியுள்ளது என ஐ.நா. தனது அறிக்கையில் கூறியுள்ளது.

2040 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 1980-ம் ஆண்டில் இருந்த நிலைக்கு திரும்பும் என்றும், ஆர்டிக் துருவம் 2045ம் ஆண்டுக்குள்ளும், அண்டார்டிக் துருவம் 2066ம் ஆண்டுக்குள்ளும், 1980ம் ஆண்டில் இருந்த நிலைக்கு திரும்பும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


ஓசோன் படலத்தில் காணப்படும் ஓட்டை - 20 ஆண்டுகளில் ஏற்படவுள்ள மாற்றம் பூமியின் மேற்பரப்பில் ஓசோன் படலத்தில் காணப்படும் ஓட்டை அடுத்த 20 ஆண்டுகளில் சீராகும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து மனிதர்களை பாதுகாக்கும் படலமான ஓசோனில் காற்றில் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஓட்டை வீழ்ந்தது.இதனால் சூரியனில் இருந்து வெளியாகும் நச்சுக்கதிர்களால் புற்றுநோய் போன்றவை ஏற்பட்டு மனித குலம் பெரும் பாதிப்படைந்து எதிர்நோக்கி வருகின்றது.இந்நிலையில், தற்போது வளி மண்டல அடுக்கை அழிக்கும் வான்வழி இரசாயனங்கள் குறைந்து வருகின்றது.இதன் காரணமாக 20 ஆண்டுகளுக்குள் ஓசோன் படலம் சீராகும் என்றும் ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டம் தொடர்பான அமைப்பின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ஒசோன் படத்தில் உண்டான துளை மெல்ல மெல்லச் சரியாகி வருவதாக ஐ.நா சபை தகவல் தெரிவித்துள்ளது.குறிப்பாக, ஒசோன் படலத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக அண்டார்டிகாவுக்கு மேலே ஓசோன் படலத்தில் ஏற்பட்ட துளை சுருங்கியுள்ளது என ஐ.நா. தனது அறிக்கையில் கூறியுள்ளது.2040 ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 1980-ம் ஆண்டில் இருந்த நிலைக்கு திரும்பும் என்றும், ஆர்டிக் துருவம் 2045ம் ஆண்டுக்குள்ளும், அண்டார்டிக் துருவம் 2066ம் ஆண்டுக்குள்ளும், 1980ம் ஆண்டில் இருந்த நிலைக்கு திரும்பும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement