• Apr 25 2024

யாழில் வீடு புகுந்து தாக்குதல் - பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் அடித்து உடைப்பு

harsha / Dec 20th 2022, 5:57 pm
image

Advertisement

வளலாய் விமான நிலைய வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டு ஜன்னல்கள் கண்ணாடிகளை அடித்து உடைத்து சொத்து சேதம் விளைவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு 11:45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

முகங்களுக்கு கறுப்பு துணி கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிள் வந்த 15 பேர் கொண்ட குழுவினர் இந்த தாக்குதலில்  ஈடுபட்டுள்ளனர்.

முதலில் அவர்கள் வீட்டின் வெளிக் கதவினை அடித்துடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

பின்னர் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்  சைக்கிளையும் அடித்துடைத்து சேதம் விளைவித்ததுடன் பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டின் மேல் மாடி கீழ் மாடியின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்துடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த  சம்பவத்தினால் 2 இலட்சத்துக்கு அதிகமான சொத்துகளுக்கு  சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் வீடு புகுந்து தாக்குதல் - பல இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் அடித்து உடைப்பு வளலாய் விமான நிலைய வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இனம் தெரியாத நபர்கள் வீட்டு ஜன்னல்கள் கண்ணாடிகளை அடித்து உடைத்து சொத்து சேதம் விளைவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று இரவு 11:45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.முகங்களுக்கு கறுப்பு துணி கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிள் வந்த 15 பேர் கொண்ட குழுவினர் இந்த தாக்குதலில்  ஈடுபட்டுள்ளனர்.முதலில் அவர்கள் வீட்டின் வெளிக் கதவினை அடித்துடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.பின்னர் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்  சைக்கிளையும் அடித்துடைத்து சேதம் விளைவித்ததுடன் பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் வீட்டின் மேல் மாடி கீழ் மாடியின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்துடைத்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.குறித்த  சம்பவத்தினால் 2 இலட்சத்துக்கு அதிகமான சொத்துகளுக்கு  சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ்  நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement