ஹொங்கொங் விமான நிலையத்தின் அதிரடி; 150 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடை

90

ஹொங்கொங் விமான நிலையம், சுமார் 150 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விமான போக்குவரத்தினை முன்னெடுப்பதற்கு தடை விதித்துள்ளது.

இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள தடையானது எதிர்வரும் ஒரு மாத காலத்திற்கு அமுலில் இருக்குமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் குறித்த நாடுகளின் விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளின் பயணிகள் ஹொங்கொங் வழியாக பயண நடவடிக்கையினை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஹொங்கொங் விமான நிலையம் தெரிவித்துள்ளது.