எப்படி இருக்காங்க புது முல்லை? காவ்யா அறிவுமணியின் வெளியான கலக்கல் படங்கள்!

1247

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லையாக நடித்து வருபவர் காவ்யா அறிவுமணி. முன்னதாக இந்தக் கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வந்தார். அவரது மறைவுக்குப் பிறகு முல்லை கதாபாத்திரத்தில், தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் காவ்யா.

மேலும் இதற்கு முன்பு பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் தங்கையாக அறிவு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அத்தோடு இளம் சீரியல் நடிகையான இவருக்கு, சினிமா நடிகைகளுக்கு சமமாக, சமூக வலைதளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள். தொடர்ச்சியாக தனது படங்களைப் பதிவிட்டு, அதில் ஆக்டிவாகவும் இருக்கிறார் காவ்யா.

சென்னையில் பிறந்த வளர்ந்த காவ்யா அடிப்படையில் ஆர்க்கிடெக்ட். இவருக்கு நடிகை நயன்தாராவை மிகவும் பிடிக்குமாம். சின்னத்திரை நயன்தாராவாக வலம் வர வேண்டும் என்பது தான் இவருடைய மிகப்பெரிய ஆசையாம் என பரவலாக பேசப்பட்டு வருகின்றது.

மேலும் புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில் ஆர்வம் மிகுந்த காவ்யா, வித விதமான படங்களால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரம்ப செய்துள்ளார். புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில் ஆர்வம் மிகுந்த காவ்யா, வித விதமான படங்களால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரம்ப செய்துள்ளார்.

மேலும் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பு, காவ்யாவை தேடி வந்ததாம். ஆனால் பாரதி கண்ணம்மா சீரியல் படபிடிப்புக்காக அந்த வாய்ப்பை தவற விட்டு விட்டாராம். தங்கையாக நடித்து வந்த காவ்யாவுக்கு சித்ராவின் மறைவால் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வர, அதனால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார். தங்கையாக நடித்து வந்த காவ்யாவுக்கு சித்ராவின் மறைவால் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு வர, அதனால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகினார்.

அத்தோடு வேறொரு சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க தயாராகி வந்த காவ்யா, திடீரென கிடைத்த முல்லை கதாபாத்திரத்தால், அந்த சீரியலில் இருந்து விலகி விட்டாராம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: