• Apr 18 2024

ஹிருணிகா மீதான கடத்தல் வழக்கு பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு!

Chithra / Jan 30th 2023, 3:46 pm
image

Advertisement

இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டமை தொடர்பாக ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு எதிரான வழக்கை பெப்ரவரி 28ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்த போதும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, சாட்சியங்களை முன்னெடுப்பதற்கு மேலதிக அவகாசத்தை கோரினார்.

இதற்கு முன்னர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பாடசாலை மாணவி ஒருவரை தவிர, கடத்தல் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மற்ற 7 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்தது.

2015 டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொடைக்கு கறுப்புப் பாதுகாப்பு வாகனத்தில் (ஹிருணிகாவுக்கு சொந்தமான டிபென்டர் வாகனம்) வந்த சிலர் தம்மை கடத்திச் சென்று தாக்கியதாக அமில பிரியங்கர என்பவர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹிருணிகா மீதான கடத்தல் வழக்கு பெப்ரவரிக்கு ஒத்திவைப்பு இளைஞர் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டமை தொடர்பாக ஹிருணிகா பிரேமசந்திரவிற்கு எதிரான வழக்கை பெப்ரவரி 28ஆம் திகதிக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட இருந்த போதும் சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி, சாட்சியங்களை முன்னெடுப்பதற்கு மேலதிக அவகாசத்தை கோரினார்.இதற்கு முன்னர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பாடசாலை மாணவி ஒருவரை தவிர, கடத்தல் வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்ட மற்ற 7 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையை விதித்தது.2015 டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி தெமட்டகொடைக்கு கறுப்புப் பாதுகாப்பு வாகனத்தில் (ஹிருணிகாவுக்கு சொந்தமான டிபென்டர் வாகனம்) வந்த சிலர் தம்மை கடத்திச் சென்று தாக்கியதாக அமில பிரியங்கர என்பவர் குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement