கணவனை தொடர்ந்து மனைவியும் பலி-வவுனியாவில் அச்சம்

224
Sri Lanka police investigators conduct a probe at the home of murdered former Agence France-Presse journalist Mel Gunasekera in the capital Colombo on February 2, 2014. Gunasekera was stabbed to death after a break-in at her family's home in the Sri Lankan capital Colombo. AFP PHOTO/Ishara S.KODIKARA (Photo credit should read Ishara S.KODIKARA/AFP via Getty Images)

வவுனியாவில் கடந்த வாரம் கொரோனா தொற்றால் உயிரிழந்த முதியவரின் மனைவியும் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார்.

குறித்த மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா-புளியங்குளம் பகுதியைசேர்ந்த முதியவர் ஒருவர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிலநாட்களிற்கு முன்பாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருடைய பி.சி.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக வெலிக்கந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

இதேவேளை அவரது மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் சிலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த முதியவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கொழும்பு கோமாகம வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை மரணமடைந்துள்ளார்.

இதேவேளை, அவரது கணவனின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டிருந்த சில குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: