மனைவியை கத்தியால் குத்திய கணவர் தலைமறைவு! யாழில் சம்பவம்

100

யாழ்ப்பாணத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திய கணவர், தலைமறைவாகியுள்ளார்.

தையிட்டி பகுதியில் வசிக்கும் கணவன், மனைவிக்கு இடையில் நேற்று மாலை தகராறு ஏற்பட்டுள்ளது.

அதன்போது, 22 வயதான தனது மனைவியை கத்தியால் குத்திக் காயப்படுத்திய கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.

கத்திக்குத்து காயத்திற்கு உள்ளான மனைவியின் அவலக் குரல் கேட்டு, அயலவர்கள் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதுதொடர்பில், காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், தலைமறைவாகியுள்ள கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: