• Apr 25 2024

குறுகிய காலத்தில் மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்தேன்! - புதிய முதல்வர் ஆனால்ட்

Chithra / Jan 21st 2023, 4:36 pm
image

Advertisement

யாழ்.மாநகர  முதல்வராக வழங்கப்பட்ட குறுகிய காலத்துக்குள் மக்களின் தேவைகளை அறிந்து  முடிந்த வரை நிறைவேற்றுவேன் என யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட் தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை யாழ். மாநகர சபையின் புதிய முதல்வராக பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்லே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

கடந்த 19ஆம் திகதி  யாழ் மாநகர முதல்வருக்கான தெரிவு இடம்பெற்ற போது  கோரம் காணப்பட்ட நிலையில் எனது பெயரை முதல்வராக முன்மொழிந்தார்கள்.

இருப்பினும் கோரம் இல்லை என கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் எமது ஆட்சேபனைகளை உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

அதன் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் எனது பெயரை முதல்வராக அறிவித்தால் விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்டு மாநகரக் கட்டளை சட்டங்களுக்கு உட்பட்டு  முதல்வராகப் பதவியேற்றுள்ளேன்.

சிலர் நான் பதவியேற்றமை சட்டத்தின் பிரகாரம் பிழையென கூறுவதாக அறிந்தேன் பிழை இருப்பின் அவர்கள் நீதிமன்றம் செல்லலாம் சட்டம் எதைச் சொல்கிறதோ அதை நான் செய்வதற்கு தயாராக இருக்கிறேன்.

ஏற்கனவே மூன்று வருடங்கள் யாழ் மாநகர முதல்வராக கடமை ஆற்றியுள்ள நிலையில் அனைத்து உறுப்பினர்களுடன் சேர்ந்து குறுகிய காலத்துக்குள் எம்மால் ஆற்ற வேண்டிய அனைத்து பணிகளையும் ஆற்றுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.


குறுகிய காலத்தில் மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்தேன் - புதிய முதல்வர் ஆனால்ட் யாழ்.மாநகர  முதல்வராக வழங்கப்பட்ட குறுகிய காலத்துக்குள் மக்களின் தேவைகளை அறிந்து  முடிந்த வரை நிறைவேற்றுவேன் என யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட் தெரிவித்தார்.இன்று சனிக்கிழமை யாழ். மாநகர சபையின் புதிய முதல்வராக பதவியேற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்லே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 19ஆம் திகதி  யாழ் மாநகர முதல்வருக்கான தெரிவு இடம்பெற்ற போது  கோரம் காணப்பட்ட நிலையில் எனது பெயரை முதல்வராக முன்மொழிந்தார்கள்.இருப்பினும் கோரம் இல்லை என கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக உள்ளூராட்சி ஆணையாளர் தெரிவித்திருந்தார்.குறித்த விடயம் தொடர்பில் எமது ஆட்சேபனைகளை உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.அதன் பிரகாரம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் எனது பெயரை முதல்வராக அறிவித்தால் விடுக்கப்பட்ட நிலையில் இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்டு மாநகரக் கட்டளை சட்டங்களுக்கு உட்பட்டு  முதல்வராகப் பதவியேற்றுள்ளேன்.சிலர் நான் பதவியேற்றமை சட்டத்தின் பிரகாரம் பிழையென கூறுவதாக அறிந்தேன் பிழை இருப்பின் அவர்கள் நீதிமன்றம் செல்லலாம் சட்டம் எதைச் சொல்கிறதோ அதை நான் செய்வதற்கு தயாராக இருக்கிறேன்.ஏற்கனவே மூன்று வருடங்கள் யாழ் மாநகர முதல்வராக கடமை ஆற்றியுள்ள நிலையில் அனைத்து உறுப்பினர்களுடன் சேர்ந்து குறுகிய காலத்துக்குள் எம்மால் ஆற்ற வேண்டிய அனைத்து பணிகளையும் ஆற்றுவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement