போர்க் காலத்திலேயே நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டு வந்தவன் நான்; ஓரிரு நாளில் வேலையைக் காட்டுவேன்! தம்மிக்க

“இலங்கையில் போர்க் காலத்திலேயே நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டு வந்தவன் நான். எனவே, தற்போதைய சூழ்நிலையிலும் எனக்கு முதலீடுகளை உள்ளீர்க்க முடியும். அதனைச் செய்து காட்டுவேன்.”

இவ்வாறு சூளுரைத்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நேற்றுப் பதவியேற்ற தம்மிக்க பெரேரா.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போதுதான் கப்பலில் ஏறியுள்ளேன். இன்னும் ஓரிரு நாட்களில் எனது வேலையைக் காட்டுவேன். நாட்டுக்கு நிச்சயம் முதலீடுகளைக் கொண்டு வருவேன். அதற்கான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வவுனியா, கண்டி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளிலும் கடவுச்சீட்டை ஒரு நாளில் விநியோகிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” – என்றார்.

போர்க் காலத்தில் இவரே இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவராகச் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை