மோடி பிரதமராக இருந்திருந்தால் இலங்கை தமிழர்கள் யாரும் இறந்திருக்க மாட்டார்கள்-அண்ணாமலை கருத்து!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் கருத்தரங்கு சென்னை தி நகரில் இன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை,

இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டதால், பல தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்.

ஆனால் அவர்களும் பல்வேறு காலக்கட்டத்தில் இலங்கை மக்களுக்காக போராடியுள்ளனர்.

தமிழ்நாடு பாஜக வேண்டாத கட்சியாக, வேண்டாத கொள்கையாக ஒரு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் காலச் சக்கரத்தை மாற்றியமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் 2008ஆம் ஆண்டு மோடியை பிரதமராக மாற்ற வரம் கேட்டிருப்பேன்’’ என்று கூறினார்.

அதேவேளை தொடர்ந்து பேசிய அவர் ”மோடி வைரம் என்று எனக்கு தெரியும். ஆனால் அவரைப் பற்றி யாரும் இங்கு பேசவில்லை. அதனால் நான் பேசவேண்டிய சூழல் உள்ளது.

மோடி உரக்கப் பேசினால் அமெரிக்காவே கேட்கும். போர் உச்சக் கட்டத்தில் இருக்கும்போது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால் தமிழர்கள் யாரும் இறந்திருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை