வாஸ்து சாஸ்திரப்படி சாப்பிடும் போது சரியான திசையில் அமர்ந்து சாப்பிடுவது மிகவும் முக்கியம். இல்லையெனில், அது நம் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
உணவு நமது ஆரோக்கியம் மற்றும் ஆற்றலுடன் நேரடியாக தொடர்புடையது, எனவே வாஸ்து சாஸ்திரத்தில், உணவு உட்கொள்ளும் போது கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய சில விதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வாஸ்து சாஸ்திரப்படி சாப்பிடும் போது சரியான திசையில் அமர்ந்து சாப்பிடுவது மிகவும் முக்கியம். இல்லையெனில், அது நம் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
சாப்பிடும் போது எப்போதும் சரியான திசையை பார்த்து உட்காரவும். வாஸ்து சாஸ்திரப்படி கிழக்கு நோக்கி அமர்ந்து உணவு உண்பது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் உடலுக்கு நேர்மறை ஆற்றல் கிடைக்கும். உணவு நன்றாக ஜீரணமாகும் என்று கூறப்படுகிறது.
மேலும், வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிடுவதும் நல்லது. இது மன அழுத்தம் மற்றும் நோய்களை நீக்குகிறது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனம் ஒருமைப்படும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, பணம், அறிவு பெற விரும்புபவர்கள் எப்போதும் வடக்கு நோக்கி அமர்ந்து உணவு உண்ண வேண்டும். மேலும், தொழில் தொடங்குபவர்கள் வடக்கு திசை பார்த்து நல்ல பலன் தரும் உணவுகளை உண்பதாக நம்பப்படுகிறது.
வியாபாரம் செய்பவர்கள் அல்லது வேலையில் விரைவான முன்னேற்றத்தை விரும்புபவர்கள் மேற்கு திசை பார்த்து உணவு உண்ண வேண்டும். இது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
பிற செய்திகள்
- மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு – புற்றுநோய் சிகிச்சை பிரிவுகள் மூடப்படும் நிலை!
- அவுஸ்திரேலிய கடற்படையின் கப்பல்கள் கொழும்பில்!
- ஈஸ்டர் தாக்குதலுக்கு இணையான பயங்கரவாத தாக்குதலை இந்தியாவில் நடத்த திட்டம்? புலனாய்வு அமைப்பு சந்தேகம்
- யாழில் இரு இளைஞர்கள் மரணம் – வெளியான உடற்கூற்று பரிசோதனை
- பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் திடீர் தீ விபத்து!
- குருந்தூர் மலை – வெடுக்குநாரி ஆலய விவகாரங்களுக்கு விரைவில் தீர்வு
- பரீட்சையில் கொப்பி அடிப்பதை தவிர்க்க மாணவர்களின் விசித்திர தொப்பிகள்!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka