மன்னாரில் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு

133

மன்னாரில் இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று காலை முதல் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார்- சித்திவிநாயகர் இந்து கல்லூரி மற்றும் பேசாலை சென்மேரிஸ் பாடசாலை ஆகிய இடங்களில், பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவை இணைந்து, 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசியின் முலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு 2ஆவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, கடந்த மாதம் முதலாவது பைஸர் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு இன்று 2 ஆவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: