• Sep 29 2024

ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! samugammedia

Chithra / Sep 21st 2023, 7:45 am
image

Advertisement

 2021ஆம் ஆண்டுக்கான ஆசிரிய ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன நேற்று (20) வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, வர்த்தமானி திருத்தம் செய்யப்பட்ட உடனேயே அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

2019 மற்றும் 2020 தேர்வர்கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் 19 பீடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வுக்குப் பின்னர் இவர்கள் அனைவரையும் ஒக்டோபர் மாத தொடக்கத்தில் 19 பீடங்களுக்கு உள்வாங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி தரவுகளின் அடிப்படையில் பாடங்கள், ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

எனவே வர்த்தமானி அறிவிப்பில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும், அந்த வர்த்தமானி அறிவித்தல் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் ஆட்சேர்ப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு samugammedia  2021ஆம் ஆண்டுக்கான ஆசிரிய ஆட்சேர்ப்பு தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன நேற்று (20) வினவிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.அதன்படி, வர்த்தமானி திருத்தம் செய்யப்பட்ட உடனேயே அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.2019 மற்றும் 2020 தேர்வர்கள் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் 19 பீடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, இரண்டாம் ஆண்டு மாணவர்களின் தேர்வுக்குப் பின்னர் இவர்கள் அனைவரையும் ஒக்டோபர் மாத தொடக்கத்தில் 19 பீடங்களுக்கு உள்வாங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி தரவுகளின் அடிப்படையில் பாடங்கள், ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளன.எனவே வர்த்தமானி அறிவிப்பில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும், அந்த வர்த்தமானி அறிவித்தல் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement