எரிபொருள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

நாட்டை வந்தடைந்துள்ள டீசல் கப்பலுக்கான கட்டணம் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

கடந்த 7 ஆம் திகதி நாட்டை வந்தடைந்த 41​,000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலுக்கே கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெட்ரோல் கப்பலிலிருந்து பெட்ரோலை தரையிறக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,லங்கா நிலக்கரி நிறுவனம் 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரி அடங்கிய 5 கப்பல்கள் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதற்கமைய முதலாவது கப்பல் அடுத்த மாதம் 20 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை