முகப்புத்தகம் ஊடாக செய்திகளை பகிர தடை-விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு..!

128

செய்தித் தளங்களுக்கு பிரவேசிப்பதனூடாக செய்திகளை வாசித்தல் மற்றும் செய்திகளைப் பகிர்வதற்கு அவுஸ்திரேலிய பயனாளர்களுக்கு முகப்புத்தகம் நிறுவனம் தடை விதித்துள்ளது.

மேலும் புதிய ஊடக சட்டம் தொடர்பான சர்ச்சை காரணமாக முகப்புத்கக் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, விளம்பர வருமானங்களை ஊடகங்கள் இழந்து வரும் நிலையில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை வெளியிட்டு டிஜிட்டல் தளங்கள் வருமானமீட்டி வருகின்றன.

அத்தோடு அவுஸ்திரேலிய அச்சு ஊடகங்கள் விளம்பர வருவாயில் பாரிய சரிவை சந்தித்துள்ள நிலையில், அவுஸ்திரேலிய அரசு சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்றை முன்மொழிந்தது.

மேலும் இந்த சட்டம் அமுல்படுத்தப்படுமாயின் கூகுள், முகப்புத்தகம் போன்ற நிறுவனங்கள் அவுஸ்திரேலியாவின் செய்தி உள்ளடக்கங்களை பயன்படுத்துவதற்காக உள்ளூர் செய்தி நிறுவனங்களுடன் தமது வருமானத்தை பகிர்ந்து கொள்ள நேரிடும்.

அத்தோடு இதனால் கூகுள் மற்றும் முகப்புத்தகம் போன்ற நிறுவனங்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தன.

மேலும் இந்நிலையில், இந்த சட்டம் அமுல்படுத்தப்படுமெனவும் பாராளுமன்ற கீழ் சபையில் குறித்த சட்டமூலம் நேற்று வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டதாகவும் அவுஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.

இதனை தொடர்ந்து, அவுஸ்திரேலிய பயனாளர்கள் பிரவேசிக்க முடியாத வகையில் அனைத்து உள்ளூர் மற்றும் சர்வதேச செய்தி தளங்களை முகப்புத்தக நிறுவனம் முடக்கியுள்ளது.

மேலும் இந்த நடவடிக்கைக்கு அவுஸ்திரேலிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், நம்பகத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: