இராணுவத் தளபதி சற்றுமுன் வெளியிட்ட முக்கிய தகவல்

775

நாட்டில் தற்போது அமுலில் காணப்படுகின்ற தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், மேலும் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அடுத்த வாரம் நாட்டைத் திறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள செயலணிக் கூட்டத்தில் இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.

அத்துடன், கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில் நாட்டை எவ்வாறு திறப்பது என்பது குறித்த பரிந்துரை, இந்த வாரம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அவ்வாறு தெரிவிக்கப்படுகின்ற பரிந்துரைகளின் படி நாடு திறக்கப்படுவதற்கான வழிமுறை தீர்மானிக்கப்படும்.
.
இதேவேளை, நாட்டை திறந்தாலும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடந்து கடுமையாக அவதானிக்கப்பட்ட வேண்டும் என மேலும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: