வாட்சப் தொடர்பில் பல்வேறு புதிய தொழில்நுட்ப பிரச்சனைகள் சர்ச்சையாக காணப்படுகிறது. இந்த நிலையில், இலங்கை வாட்ஸ்அப் பயனாளர்கள் ஆயிரக்கணக்கானோரின் கணக்குகள் முடக்கப்படும் ஆபத்துக்கள் உள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் அறிவித்துள்ளது .
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையின் தொகுப்பையும் மே 15 ஆம் திகதிக்குள் ஏற்றுக்கொள்ளாத அனைத்து வாட்ஸ்அப் பயனர்களும் இனிமேல் குறுந்தகவல் பெறவோ அல்லது செய்திகளை அனுப்பவோ முடியாதென என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.
புதிய விதிமுறைகளையும் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளாத பயனர்களுக்கு தற்காலிகமாக வரையறுக்கப்பட்ட நேர அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளை மாத்திரமே வழங்கப்படும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன் 120 நாட்களுக்குப் பிறகு செயலற்ற கணக்குகள் நீக்கப்படும் என்று இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையின் தொகுப்பை ஏற்காத வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் செயலற்ற கணக்குகள் என்று பட்டியலிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- திருகோணமலையில் ஆயுள்வேத வைத்தியர் இருவர் கைது!
- பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விஷேட அறிவுறுத்தல்.
- ஈஸ்டர் தாக்குதல்-கோட்டாபய ராஜபக்சவிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும்..!
- திருகோணமலையில் டைனமெட் வைத்திருந்த வைத்தியருக்கு நேர்ந்த கதி..!
- சீன மொழி பெயர்ப்பலகையை அகற்ற முடியாது-அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!
- தமிழ் தேசியம் பேசும் தலைவர்களால் ஈழத்தமிழர்களிற்கு காத்திருக்கும் பேராபத்து; நடராசா ஜெயகாந்தன்!
- சஹ்ரானின் முதல் இலக்கு இதுதான்; சிங்கள மக்களை பதற வைத்த தகவல்!
- வவுனியாவில் வீட்டின் முற்றத்தில் கிடந்த சடலம்; காலையில் எழுந்துவந்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!
- முருங்கன் சமுர்த்தி வங்கியில் இடம்பெற்ற நிகழ்வு; ஏற்பட்டுள்ள மாற்றம்!
- அலரி விதையினை உட்கொண்ட மாணவி உயிரிழப்பு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் முகநூல்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்