• Dec 01 2022

சபரிமலைக்கு விமானத்தில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!

crownson / 6 days ago
image

இலங்கையை, மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து இந்தியாவின் கேரளா பகுதியில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் சுவாமி ஆலயத்திற்கு வருடம் தோறும் பல பக்தர்கள் படையெடுப்பது வழமையே! அதையொட்டி இந்த வருடமும் அதிகமான பக்தர்கள் சபரிமலையை நோக்கி படையெடுத்துள்ளனர்.

இதில் குழந்தை பக்தர்களும் உள்ளடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் வேற்று மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு விமானத்தின் மூலம் வரும் பக்தர்கள் தங்களது இருமுடியை தங்களுடன் வைத்திருக்க முயற்சி செய்கின்ற பொழுது விமானப்படையினர் அதற்கு தடை விதித்திருந்தனர்.

ஆனால் தற்பொழுது விமானத்தில் சபரிமலை செல்லும் பக்தர்கள் தங்களுடன் தேங்காயை எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்புப் பிரிவு அனுமதி அளித்துள்ளது. விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் போது, எளிதில் தீப்பிடிக்க வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் தேங்காயை தங்களுடன் பயணிகள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக சரக்குப் பகுதியில் வைத்து எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

இந்நிலையில், மண்டல-மகர விளக்கு பூஜையையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக இருமுடியை தங்களுடனேயே எடுத்துச் செல்ல சிவில் விமான பாதுகாப்புப் பிரிவு அனுமதி அளித்துள்ளது. இது, அடுத்த ஆண்டு ஜனவரி  20ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும், எக்ஸ்ரே, வெடிபொருள் பரிசோதனை, நேரடி பரிசோதனை ஆகியவற்றை விமான பாதுகாப்புக் குழுவினர் மேற்கொள்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.