• Mar 29 2024

சுவாசம் சார்ந்த நோய் உள்ளவரக்ளுக்கு முக்கிய அறிவிப்பு

harsha / Dec 1st 2022, 6:35 pm
image

Advertisement

இந்தியா மற்றும் அண்டை நாடுகளின் காற்று மாசுபாடு இலங்கையின் வான்வெளிக்குள் நுழைவதால் இலங்கையின் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த NBRO இன் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி:

 இதன் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக புகை மூட்டம் காணப்படுகின்றது.

“மற்ற நாடுகளின் காற்று மாசுபாடு இலங்கையின் வான்பரப்பிற்குள் நுழைகிறது, முக்கியமாக இந்தியாவில் இருந்து. எவ்வாறாயினும், அடுத்த சில நாட்களில் இந்த நிலைமை மேம்படும் என எதிர்பார்க்கிறோம்” என பிரேமசிறி மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் பருவமழை காலத்தில் இது ஒரு பொதுவான நிகழ்வு என்று கூறிய அவர், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இது அவ்வப்போது ஏற்படும் என்றார்.

பிரேமசிறி சுவாசிப்பதில் சிரமம் தொடர்பான நோய்களைக் கொண்டவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் எச்சரித்துள்ளார்.

சுவாசம் சார்ந்த நோய் உள்ளவரக்ளுக்கு முக்கிய அறிவிப்பு இந்தியா மற்றும் அண்டை நாடுகளின் காற்று மாசுபாடு இலங்கையின் வான்வெளிக்குள் நுழைவதால் இலங்கையின் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த NBRO இன் சுற்றாடல் பிரிவின் பணிப்பாளர் சரத் பிரேமசிறி: இதன் காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக புகை மூட்டம் காணப்படுகின்றது. “மற்ற நாடுகளின் காற்று மாசுபாடு இலங்கையின் வான்பரப்பிற்குள் நுழைகிறது, முக்கியமாக இந்தியாவில் இருந்து. எவ்வாறாயினும், அடுத்த சில நாட்களில் இந்த நிலைமை மேம்படும் என எதிர்பார்க்கிறோம்” என பிரேமசிறி மேலும் தெரிவித்தார்.இலங்கையில் பருவமழை காலத்தில் இது ஒரு பொதுவான நிகழ்வு என்று கூறிய அவர், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இது அவ்வப்போது ஏற்படும் என்றார்.பிரேமசிறி சுவாசிப்பதில் சிரமம் தொடர்பான நோய்களைக் கொண்டவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் எச்சரித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement