மே மாதத்தில் மட்டும் 1,500 சுற்றுலா பயணிகள் வருகை

194

மே மாதம் இலங்கைக்கு ஆயிரத்து 500 சுற்றுலா பயணிகள் வருகைத் தந்துள்ளனர் என்று, இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானவர்கள் சீனா, ஜேர்மன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தே வருகை தந்துள்ளனர்.

ஏப்ரல் மாதம் 4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர் என்றும் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 15 ஆயிரத்து 294 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

கசகஸ்தான், ஜேர்மன், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்தே அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: