• Apr 19 2024

யாழில் நெற்பயிர்கள் அழிவடையும் நிலையில்- வடமாகாண விவசாயத்துறையின் வேண்டுகோள்!

Sharmi / Dec 2nd 2022, 10:12 am
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் பொட்டாசியம் பற்றாக்குறையால் நெற்பயிர்களின் நுனிப் பகுதிகளில் கருகல் தன்மை ஏற்படுவது பரவலாக  அவதானிக்கப்பட்டுள்ளது என்றும்  எனவே விவசாயிகள் பொருத்தமான அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் வடமாகாண பதில் விவசாயப் பணிப்பாளர் ஸ்ரீ.அஞ்சனாதேவி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ். மாவட்டத்தில் சுமார் 13 ஆயிரம் ஹெக்ரேயர் விஸ்தீரணத்தில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்இ நெற்பயிர்கள் பொட்டாசியக் குறைவால் நுனி கருகிப் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக சாவகச்சேரி, கைதடி, நவாலி,கோப்பாய், கரவெட்டி, சண்டிலிப்பாய்,காரைநகர் போன்ற பல பகுதிகளில் இந்த நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறியாக முதிர்ச்சி அடைந்த இலைகள் கடும்மஞ்சள் நிறமாவதோடு பொட்டாசியப் பற்றாக்குறை அதிகமாகும்போது இலைகள் நுனியில் இருந்து அடிவரை செம் மஞ்சள் நிறத்திலிருந்து மஞ்சள் அல்லது கபில நிறமாக மாறும். அதாவது இலையின் நுனிப்பகுதியல் தலைகீழ் 'வி' (v) வடிவில் எரிவுகள் ஆரம்பிக்கும்.

இலை நுனிப்பகுதியில் இருந்து படிப்படியாக இறக்கத் தொடங்கும். இதன் காரணமாக நெல் மணிகள் பதர் ஆகும். இதனால் பெரியளவு உற்பத்தியிழப்பு ஏற்படும்.

இந்த அழிவு நிலையில் இருந்து நெல்களைக் காப்பாற்றுவதற்காக விவசாயிகள். பொட்டாசியம் அடங்கிய இரசாயனப் பசளைகளை பரிந்துரைக்கமைய பயன்படுத்தவேண்டும். அதேவேளை பொட்டாசியம் அடங்கிய திரவப்பசளையை பரிந்துரைக்க மைய விசிறல் வேண்டும். 

மேலும் வைக்கோலில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுவதால் அடுத்த போகத்தில் வைக்கோலை இட்டு உழவுசெய்ய வேண்டும்.

நெல் அடிக்கட்டைகளை அறுவடையின் பின்னர் உழுதுவிடல்,  கிளிசிரிடியா இலைகளை வயலில் தூவிவிடல் மூலமும் நைதரசன் மற்றும் பொட்டாசியம் என்பவற்றை நெற்களுக்குக் கிடைக்கச் செய்யலாம்  என தெரிவித்தார்.

யாழில் நெற்பயிர்கள் அழிவடையும் நிலையில்- வடமாகாண விவசாயத்துறையின் வேண்டுகோள் யாழ்ப்பாணத்தில் பொட்டாசியம் பற்றாக்குறையால் நெற்பயிர்களின் நுனிப் பகுதிகளில் கருகல் தன்மை ஏற்படுவது பரவலாக  அவதானிக்கப்பட்டுள்ளது என்றும்  எனவே விவசாயிகள் பொருத்தமான அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் வடமாகாண பதில் விவசாயப் பணிப்பாளர் ஸ்ரீ.அஞ்சனாதேவி தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,யாழ். மாவட்டத்தில் சுமார் 13 ஆயிரம் ஹெக்ரேயர் விஸ்தீரணத்தில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில்இ நெற்பயிர்கள் பொட்டாசியக் குறைவால் நுனி கருகிப் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சாவகச்சேரி, கைதடி, நவாலி,கோப்பாய், கரவெட்டி, சண்டிலிப்பாய்,காரைநகர் போன்ற பல பகுதிகளில் இந்த நிலைமை அவதானிக்கப்பட்டுள்ளது.இந்தக் குறைபாட்டின் ஆரம்ப அறிகுறியாக முதிர்ச்சி அடைந்த இலைகள் கடும்மஞ்சள் நிறமாவதோடு பொட்டாசியப் பற்றாக்குறை அதிகமாகும்போது இலைகள் நுனியில் இருந்து அடிவரை செம் மஞ்சள் நிறத்திலிருந்து மஞ்சள் அல்லது கபில நிறமாக மாறும். அதாவது இலையின் நுனிப்பகுதியல் தலைகீழ் 'வி' (v) வடிவில் எரிவுகள் ஆரம்பிக்கும்.இலை நுனிப்பகுதியில் இருந்து படிப்படியாக இறக்கத் தொடங்கும். இதன் காரணமாக நெல் மணிகள் பதர் ஆகும். இதனால் பெரியளவு உற்பத்தியிழப்பு ஏற்படும்.இந்த அழிவு நிலையில் இருந்து நெல்களைக் காப்பாற்றுவதற்காக விவசாயிகள். பொட்டாசியம் அடங்கிய இரசாயனப் பசளைகளை பரிந்துரைக்கமைய பயன்படுத்தவேண்டும். அதேவேளை பொட்டாசியம் அடங்கிய திரவப்பசளையை பரிந்துரைக்க மைய விசிறல் வேண்டும். மேலும் வைக்கோலில் அதிகளவு பொட்டாசியம் காணப்படுவதால் அடுத்த போகத்தில் வைக்கோலை இட்டு உழவுசெய்ய வேண்டும்.நெல் அடிக்கட்டைகளை அறுவடையின் பின்னர் உழுதுவிடல்,  கிளிசிரிடியா இலைகளை வயலில் தூவிவிடல் மூலமும் நைதரசன் மற்றும் பொட்டாசியம் என்பவற்றை நெற்களுக்குக் கிடைக்கச் செய்யலாம்  என தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement