• Sep 29 2024

யாழில், சர்வதேச வர்த்தக கண்காட்சி சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது - தொழிற்துறை மன்ற தலைவர் அழைப்பு!! SamugamMedia

Tamil nila / Mar 1st 2023, 5:13 pm
image

Advertisement

பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில், எனும் தொனிப்பொருளில், எதிர்வரும் 3 ம் ,  4ம் திகதிகளில் 13 வது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை  நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம் என யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்ற தலைவர் குலரட்ணம் விக்னேஸ் தெரிவித்துள்ளார்.


யாழில், இன்று (01.03.2023)  இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.


வர்த்தகக் கண்காட்சியானது இந்தப் பிரதேசத்திலே இருக்கின்ற முயற்சியாளர்கள் , வியாபாரிகள் மற்றும் பொதுமக்களால்  பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக காணப்படுகின்றது.

 

கண்காட்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் எதிர்வரும் 3 ம் திகதி பிரதம விருந்தினராக  வடமாகாண ஆளுனரும் சிறப்பு விருந்தினராக  இந்திய துணைத் தூதுவர் கலந்து கொள்ளவுள்ளார்.

இவர்களை விட  யாழ் மாவட்ட அரச அதிபர் உட்பட வட பகுதியிலே இருக்கின்ற உயர் அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக சமூகம் என பல்வேறு உயர் பதவிகளிலே இருக்கின்றவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


ஆரம்ப நிகழ்வானது 3 ம் திகதி காலை 10 மணிக்கு ரில்கோ  விடுதி மண்டபத்திலிருந்து ஊர்வலமாக கண்காட்சி நடைபெறுகின்ற முற்றவெளி மைதானத்திற்கு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதன் பின்னர் கண்காட்சி ஆரம்பமாகும். 


இந்த அளவிற்கு  எதிர்பார்ப்புக்கும்  பிரதான காரணம் யுத்தத்தின் பின் பொருளாதார ரீதியில் பின் தங்கியிருந்த வட மாகாணத்ததை கட்டியெழுப்ப வேண்டிய தேவைப்பாடு இருந்தது. அந்த வகையில்  இங்குள்ள உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை மேற்கொள்ளவும் சந்தை வாய்ப்பை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பெற்றுக் கொள்ள் உச்ச அளவில் உதவியுள்ளது. 


யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கூடாக தேசிய மற்றும்  சர்வதேச ரீதியில் முன்னணி வகிக்கின்ற வணிகங்கள் இங்கு ஆரம்பிக்க வழிவகுக்கின்றது. சிறு கைத்தொழில் சார் உற்பத்திகளை தேசிய ,சர்வதேச தளத்திற்கு கொண்டு செல்ல உதவி புரிகின்றது. தேசிய ரீதியி்ல்  இயங்கிக்கொண்டிருக்கும் வர்த்தகங்கள் எமது சிறு கைத்தொழிலுடன் இணைந்து வர்த்தகத்தை முன்னெடுக்க வாய்ப்புக்களை ஏற்படுத்துகின்றது.


இக் கண்காட்சிக்கு 15000 க்கு மேற்பட்டவர்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.  அவர்களின் வருகையால் விருந்தினர் விடுதி , உணவகஙகள் பயனடைகின்றன. எமது உற்பத்தியை கொள்வனவு செய்ய வழி காட்டுகின்றது நேரடியாகவும் மறைமுகமாகவும்  எமக்கு சாதக விளைவையே ஏற்படுத்துகின்றது.


சுமார் 250 காட்சிக் கூடங்கள்அமையப்பெறவுள்ளதுடன் கண்காட்சியைப் பார்வையிட  50000 பேர் வரை வருவார்கள் என எதிர்பார்த்துள்ளதுடன் பார்வையாளர் ஒருவருக்கான நுழைவுகக்கட்டணம் 100 ரூபாவாகவும் பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் வரும் தருணம் முற்றிலும் இலவசமாக அனுமதிக்கப்படுவர்.  கண்காட்சியில் கல்வத்துறைக்கான விசேடமான கண்காட்சிக்கூடமும்  அமைக்கப்பட்டுள்ளது அதில் மாணவர்கள் கல்விக்கான வாய்ப்புக்ளை அறிய முடியும். எமது பிரதேச ஏனைய தேவைகளை கருத்தில் கொண்டு விவசாயத்துறை , மீன்பிடித்துறை , நெசவுத்துறை மற்றும் ஏனைய துறைசார் காட்சிக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.


இதனை அனைவரும் வாய்ப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். இக் கண்காட்சி களியாட்டமல்ல. உன்னத நோக்கத்தோடு ஒழுங்கு செய்யப்பட்ட  கண்காட்சி பல்வேறு பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைய உதவியுள்ளது. 


இக் கண்காட்சியின் சாதகத் தன்மையை கடந்த காலங்களில் ஊடகங்கள் செய்திகளை சரியான முறையில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததன் விளைவே இன்று இக் கண்காட்சி முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுகின்றது.


இதேவேளை கடந்த காலங்களில் முறையாக வரி செலுத்தபடவில்லை என ஊடகவியளாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் கடந்த காலங்களில் யாழ் மாநகர சபையும் அங்குள்ள அதிகாரிகளும் இக் கண்காட்சி சிறப்பாக இடம்பெற பூரண ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். கடந்த முதல்வர் காலத்திலும் கண்காட்சி சம்பந்தமாக 25% வரி விலக்களிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில சபை உறுப்பினர்களின் தனிப்பட்ட அரசியல் நோக்க கருத்துக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.  ஊடக வாயிலாக குறித்த விடயம் அறிந்தவுடன் அனைத்து வரிக் கட்டணங்களையும் செலுத்தி முடித்துவிட்டோம். ஒரு சிலரின் கருத்துக்கள் இவ்வாறான பாரிய நிகழ்வை களங்கப்படுத்துவதாக அமையும். எவ்வாறாயினும் யாழ் மாநகரசபையின் பங்களிப்பு கண்காட்சியின் வெற்றிக்கு அளப்பரியதாக காணப்படுகின்றது. 


ஆகவே இக் கண்காட்சிக்கு அனைத்து தரப்பினரும் உங்கள் ஆதரவை வழங்கி குறித்த வர்த்தகக் கண்காட்சில் பூரண பயனைப் பெற்றுக்கொள்ள அழைக்கின்றோம்-  என்றார்.

யாழில், சர்வதேச வர்த்தக கண்காட்சி சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது - தொழிற்துறை மன்ற தலைவர் அழைப்பு SamugamMedia பொருளாதார முன்னேற்றத்திற்கான வடக்கின் நுழைவாயில், எனும் தொனிப்பொருளில், எதிர்வரும் 3 ம் ,  4ம் திகதிகளில் 13 வது யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை  நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம் என யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்ற தலைவர் குலரட்ணம் விக்னேஸ் தெரிவித்துள்ளார்.யாழில், இன்று (01.03.2023)  இடம்பெற்ற  ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.வர்த்தகக் கண்காட்சியானது இந்தப் பிரதேசத்திலே இருக்கின்ற முயற்சியாளர்கள் , வியாபாரிகள் மற்றும் பொதுமக்களால்  பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக காணப்படுகின்றது. கண்காட்சிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் எதிர்வரும் 3 ம் திகதி பிரதம விருந்தினராக  வடமாகாண ஆளுனரும் சிறப்பு விருந்தினராக  இந்திய துணைத் தூதுவர் கலந்து கொள்ளவுள்ளார்.இவர்களை விட  யாழ் மாவட்ட அரச அதிபர் உட்பட வட பகுதியிலே இருக்கின்ற உயர் அதிகாரிகள் மற்றும் பல்கலைக்கழக சமூகம் என பல்வேறு உயர் பதவிகளிலே இருக்கின்றவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.ஆரம்ப நிகழ்வானது 3 ம் திகதி காலை 10 மணிக்கு ரில்கோ  விடுதி மண்டபத்திலிருந்து ஊர்வலமாக கண்காட்சி நடைபெறுகின்ற முற்றவெளி மைதானத்திற்கு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டதன் பின்னர் கண்காட்சி ஆரம்பமாகும். இந்த அளவிற்கு  எதிர்பார்ப்புக்கும்  பிரதான காரணம் யுத்தத்தின் பின் பொருளாதார ரீதியில் பின் தங்கியிருந்த வட மாகாணத்ததை கட்டியெழுப்ப வேண்டிய தேவைப்பாடு இருந்தது. அந்த வகையில்  இங்குள்ள உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை மேற்கொள்ளவும் சந்தை வாய்ப்பை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் பெற்றுக் கொள்ள் உச்ச அளவில் உதவியுள்ளது. யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சிக்கூடாக தேசிய மற்றும்  சர்வதேச ரீதியில் முன்னணி வகிக்கின்ற வணிகங்கள் இங்கு ஆரம்பிக்க வழிவகுக்கின்றது. சிறு கைத்தொழில் சார் உற்பத்திகளை தேசிய ,சர்வதேச தளத்திற்கு கொண்டு செல்ல உதவி புரிகின்றது. தேசிய ரீதியி்ல்  இயங்கிக்கொண்டிருக்கும் வர்த்தகங்கள் எமது சிறு கைத்தொழிலுடன் இணைந்து வர்த்தகத்தை முன்னெடுக்க வாய்ப்புக்களை ஏற்படுத்துகின்றது.இக் கண்காட்சிக்கு 15000 க்கு மேற்பட்டவர்கள் வருகைதருவார்கள் என எதிர்பார்க்கின்றோம்.  அவர்களின் வருகையால் விருந்தினர் விடுதி , உணவகஙகள் பயனடைகின்றன. எமது உற்பத்தியை கொள்வனவு செய்ய வழி காட்டுகின்றது நேரடியாகவும் மறைமுகமாகவும்  எமக்கு சாதக விளைவையே ஏற்படுத்துகின்றது.சுமார் 250 காட்சிக் கூடங்கள்அமையப்பெறவுள்ளதுடன் கண்காட்சியைப் பார்வையிட  50000 பேர் வரை வருவார்கள் என எதிர்பார்த்துள்ளதுடன் பார்வையாளர் ஒருவருக்கான நுழைவுகக்கட்டணம் 100 ரூபாவாகவும் பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் வரும் தருணம் முற்றிலும் இலவசமாக அனுமதிக்கப்படுவர்.  கண்காட்சியில் கல்வத்துறைக்கான விசேடமான கண்காட்சிக்கூடமும்  அமைக்கப்பட்டுள்ளது அதில் மாணவர்கள் கல்விக்கான வாய்ப்புக்ளை அறிய முடியும். எமது பிரதேச ஏனைய தேவைகளை கருத்தில் கொண்டு விவசாயத்துறை , மீன்பிடித்துறை , நெசவுத்துறை மற்றும் ஏனைய துறைசார் காட்சிக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.இதனை அனைவரும் வாய்ப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். இக் கண்காட்சி களியாட்டமல்ல. உன்னத நோக்கத்தோடு ஒழுங்கு செய்யப்பட்ட  கண்காட்சி பல்வேறு பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைய உதவியுள்ளது. இக் கண்காட்சியின் சாதகத் தன்மையை கடந்த காலங்களில் ஊடகங்கள் செய்திகளை சரியான முறையில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததன் விளைவே இன்று இக் கண்காட்சி முக்கியத்துவம் மிக்கதாகக் காணப்படுகின்றது.இதேவேளை கடந்த காலங்களில் முறையாக வரி செலுத்தபடவில்லை என ஊடகவியளாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் கடந்த காலங்களில் யாழ் மாநகர சபையும் அங்குள்ள அதிகாரிகளும் இக் கண்காட்சி சிறப்பாக இடம்பெற பூரண ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர். கடந்த முதல்வர் காலத்திலும் கண்காட்சி சம்பந்தமாக 25% வரி விலக்களிக்கப்பட்டது. ஆனால் ஒரு சில சபை உறுப்பினர்களின் தனிப்பட்ட அரசியல் நோக்க கருத்துக்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.  ஊடக வாயிலாக குறித்த விடயம் அறிந்தவுடன் அனைத்து வரிக் கட்டணங்களையும் செலுத்தி முடித்துவிட்டோம். ஒரு சிலரின் கருத்துக்கள் இவ்வாறான பாரிய நிகழ்வை களங்கப்படுத்துவதாக அமையும். எவ்வாறாயினும் யாழ் மாநகரசபையின் பங்களிப்பு கண்காட்சியின் வெற்றிக்கு அளப்பரியதாக காணப்படுகின்றது. ஆகவே இக் கண்காட்சிக்கு அனைத்து தரப்பினரும் உங்கள் ஆதரவை வழங்கி குறித்த வர்த்தகக் கண்காட்சில் பூரண பயனைப் பெற்றுக்கொள்ள அழைக்கின்றோம்-  என்றார்.

Advertisement

Advertisement

Advertisement