அடங்கமறுக்கும் கொரோனா; தொடர் முடக்கத்தால் சிக்கி தவிக்கும் சீனா!

உலகலாவிய ரீதியில் பல மக்களை காவுகொண்ட கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டபோதும் சீனாவில் மீண்டும் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் சீனாவின் ஷாங்காய் நகர் தொடர்ந்து 07வது வாரமாகவும் முடக்கல் நிலையில் காணப்படுகின்றது.

மேற்படி நகலை கோவிட் அற்ற நகராக மாறும் வரை முடக்குவதற்கும் இன்னும் ஓரிரு வாரங்களில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்படும் என தாம் நம்புவதாகவும் ஷாங்காய் நகரின் பிரதி மேயர் தெரிவித்துள்ளார்.

சுமார் 25மில்லியன் சனத்தொகை கொண்ட மேற்படி நகரில் கொரோனா பரவல் மூலம் பல மில்லியன் கணக்காண மக்கள் பாதிக்கப்பட்டும் இறந்தும் உள்ள நிலையில் மேற்படி தொடர்முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நேற்றைய அறிக்கையின் படி சீனாவில் 2096 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை