• Apr 19 2024

அதிக பால் உற்பத்தி செய்யக்கூடிய உயர்தர பசுக்களை இலங்கைக்கு வழங்கும் இந்தியா! SamugamMedia

Chithra / Mar 19th 2023, 11:03 am
image

Advertisement

இலங்கையின் கால்நடைத் துறையின் மறுமலர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதுடன், ஜனாதிபதி முன்னிலையிலும் இணக்கப்பாடு வெளியிடப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கால்நடைப் பண்ணைகளில் தற்போது பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்ப அறிவை இலங்கைக்கும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், அதிக பால் உற்பத்தி செய்யக்கூடிய உயர்தர பசுக்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, இந்த நாட்டில் பால் உற்பத்தியின் வீழ்ச்சி காரணமாக, ஒட்டுமொத்த தொழில்துறையும் சுமார் 19 சதவீதம் நஸ்டம் ஏற்பட்டள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதிக பால் உற்பத்தி செய்யக்கூடிய உயர்தர பசுக்களை இலங்கைக்கு வழங்கும் இந்தியா SamugamMedia இலங்கையின் கால்நடைத் துறையின் மறுமலர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் பூரண ஆதரவை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவைச் சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதுடன், ஜனாதிபதி முன்னிலையிலும் இணக்கப்பாடு வெளியிடப்பட்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இந்தியாவில் கால்நடைப் பண்ணைகளில் தற்போது பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்ப அறிவை இலங்கைக்கும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், அதிக பால் உற்பத்தி செய்யக்கூடிய உயர்தர பசுக்களை இலங்கைக்கு வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு, இந்த நாட்டில் பால் உற்பத்தியின் வீழ்ச்சி காரணமாக, ஒட்டுமொத்த தொழில்துறையும் சுமார் 19 சதவீதம் நஸ்டம் ஏற்பட்டள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement