ஜனாதிபதியுடன் இந்திய இராணுவத் தளபதி முக்கிய பேச்சு!

173

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களைப் பெறும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய, இந்திய இராணுவத் தளபதி சந்தித்ததாக இந்திய தூதுவராலயம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு ஒத்துழைப்பில் இந்தியாவின் பங்காளியான இலங்கையின் முன்னோடியான செயற்பாட்டை பாராட்டுவதாகக் ஜெனரல் நாரவனே இதன்போது தெரிவித்தார்.

இச்சந்திப்பில், ஜனாதிபதியின் செயலாளர் பிபி ஜயசுந்தர, சிரேஸ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க, இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இந்திய அதிகாரிகளும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: