• Sep 30 2024

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் இலங்கை விஜயம் ! samugammedia

Tamil nila / Aug 6th 2023, 3:23 pm
image

Advertisement

கிரிக்கெட் வீரரும், யுனிசெஃப்(UNICEF) நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியத்தின் நல்லெண்ணத் தூதருமான சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மேலும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08)  கொழும்பில் உள்ள சினமன் லேக்சைடில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்ளவதற்காகவே வருகை தரவுள்ளார்.

கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம், அதன் தொடர்ச்சியாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என்பனவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையில் ஓர் மாற்றத்தைக் கொண்டு வருவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.

யுனிசெஃப் நிறுவனத்தின் பிராந்திய நல்லெண்ண தூதராக சச்சின் தனது பங்களிப்பினை தெற்காசிய பிராந்தியம் முழுவதும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

தவிரவும் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை உயர்த்துவதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றியும் வருகிறார்.

இதேவேளை அவரது இலங்கைக்கான விஜயம், சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவுவது மாத்திரமன்றி யுனிசெஃப் இன் உயரிய திட்டங்கள் அவர் வாயிலாக செயற்படுத்தப்படுகின்றது எனவும் கூறலாம்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் இலங்கை விஜயம் samugammedia கிரிக்கெட் வீரரும், யுனிசெஃப்(UNICEF) நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியத்தின் நல்லெண்ணத் தூதருமான சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.மேலும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (08)  கொழும்பில் உள்ள சினமன் லேக்சைடில் நடைபெறவுள்ள நிகழ்வில் கலந்து கொள்ளவதற்காகவே வருகை தரவுள்ளார்.கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கம், அதன் தொடர்ச்சியாக இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி என்பனவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கையில் ஓர் மாற்றத்தைக் கொண்டு வருவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.யுனிசெஃப் நிறுவனத்தின் பிராந்திய நல்லெண்ண தூதராக சச்சின் தனது பங்களிப்பினை தெற்காசிய பிராந்தியம் முழுவதும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.தவிரவும் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை உயர்த்துவதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றியும் வருகிறார்.இதேவேளை அவரது இலங்கைக்கான விஜயம், சுகாதாரம், கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளில் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவுவது மாத்திரமன்றி யுனிசெஃப் இன் உயரிய திட்டங்கள் அவர் வாயிலாக செயற்படுத்தப்படுகின்றது எனவும் கூறலாம்.

Advertisement

Advertisement

Advertisement