ஐநாவில் சீனாவை விளாசிய இந்திய வெளிவிவகார அமைச்சர். 

இந்த மாத ஆரம்பத்தில், பாகிஸ்தானின் லஷ்கர் ஈ தைபா இயக்கத்தை சேர்ந்த சஜித் மிர் எனும் தீவிரவாதியை சர்வதேச தீவிரவாதியாக அறிவிப்பதற்கு அமெரிக்கா ஏற்பாடு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைத்திருந்தது.

இதற்கு இந்தியாவும் ஆதரவு வழங்கியிருந்த நிலையில் சீனா மாத்திரம் உடன்பட மறுத்திருந்தது. குறித்த தீவிரவாதி 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலைத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைக் கண்டிக்கும் விதமாக, நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் s. ஜெய்ஷ்ங்கர், நாடுகளின் அரசியல் நிலைகள் தீவிரவாதிகள் தண்டிக்கப்படுவதைத் தடுக்கக் கூடாது.

அண்மையில் சில நாடுகள் தீவிரவாதிகளிற்கு தண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்குவதை அவதானித்து வருகிறோம். இவ்வாறான செயல்கள் இந்த பாதுகாப்பு அமைப்பின் நோக்கத்தையே கேள்விக்கு உள்ளாக்குகின்றன என ஆணித்தரமாகக் கூறியுள்ளார். இதற்கு முன்னர் ஏற்கனவே சீனா Abdul Rehman Makki, Abdul Rauf Azhar ஆகியோருக்கு இவ்வாறு தடையிலிருந்து பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை