இந்திய மீனவர்களின் படகுகள் காங்கேசன்துறையில்!

78

இந்தியா, தமிழ்நாடு நாகைபட்டினத்தைச் சேர்ந்த படகுகளில் பயணித்த 23 மீனவர்கள் கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 23 மீனவர்கள் இன்று அதிகாலை காங்கேசன்துறைக்கு கொண்டு வரப்பட்டனர்.

இவர்களின் 5112, 8116 இலக்க படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு தற்போது காங்கேசன்துறை துறைமுகத்தில் தரித்து நிற்கின்றது.

மேலும், காரைநகரில் உள்ள இடைத்தங்கல் முகாமிற்கு அவர்களை விடப்பட்டு 14 நாட்களின் பின்பே சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: