பாக்கிஸ்தான் ரோந்து படகுகளை கைப்பற்றிய இந்திய கடற்படை!

குஐராத், இந்திய பாக்கிஸ்தான் கடல் எல்லையான “ஹராமி நல்லா” என்ற பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்த மூன்று பாக்கிஸ்தான் பகுகளை இந்தியா கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக இந்தியா செய்திகள் தெரிவிக்கின்றன.


இவ்விடயம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இந்திய கடல் எல்லையில் இருந்து 15-20 கடல் மைல் தொலைவில்  மீனவ படகுகளை அவதானித்த கடற்படையினர் அந்த படகுகளை விசாரணை செய்யும் நோக்குடன் கிட்டிச் சேர்ந்த  பொழுது அவை மீனவ படகுகள் அல்ல மாறாக பாக்கிஸ்தானிய ரோந்து படகுகள் என அடையாளம் கண்டு கொண்டதாகவும் உடனடியாக மூன்று பாக்கிஸ்தானிய படகுகளையும் இந்திய எல்லைக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் இது குறித்த மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிற செய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை