• Apr 19 2024

ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்த இந்திய வீரர்கள்!!

Tamil nila / Jan 3rd 2023, 10:26 pm
image

Advertisement

இலங்கைக்கு எதிரான முதல் T20 போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். இஷான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில், தனது முதல் சர்வதேச T20 போட்டியில் அறிமுகமான சுப்மன் கில் 5 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்து வெளியேறினார்.


பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். 10 பந்துகளை சந்தித்த சூர்யகுமார் 7 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 6 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இதனால் 46 ரன்களுக்கு 3 விக்கெட் என இந்திய அணி தடுமாறிக் கொண்டு இருந்தது. கடைசி ஓவர்களில் தீபக் ஹூடா – அக்சர் படேல் இணை அதிரடியாக விளையாடியதால் 20 ஓவர்களில் 162 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி எட்டியது.


போட்டி தொடங்குவதற்கு முன்பாக சுப்மன் கில், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பேட்டிங்கில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். அவர்களின் ஆட்டத்தில் சிக்சரும், பவுண்டரியும் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து அவர்கள் வெளியேறினர்.


இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை இஷான் கிஷன் கொடுத்தார். அதனை சுப்மன் கில், சூர்ய குமார், சஞ்சு சாம்சன் ஆகியோர் பயன்படுத்த தவறினர். இதனால் கேப்டன் பாண்ட்யா, ஹூடா, அக்சர் படேல் ஆகியோருக்கு நெருக்கடி அதிகரித்தது.


சிங்கிள் டிஜிட்டில் நடையைக் கட்டிய மூவரில் ஒருவர் சிறப்பாக விளையாடியிருந்தாலும் இந்திய அணி 180+ ஸ்கோரை எட்டியிருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்

ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை பரிசளித்த இந்திய வீரர்கள் இலங்கைக்கு எதிரான முதல் T20 போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். இஷான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில், தனது முதல் சர்வதேச T20 போட்டியில் அறிமுகமான சுப்மன் கில் 5 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் எடுத்து வெளியேறினார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். 10 பந்துகளை சந்தித்த சூர்யகுமார் 7 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 6 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். இதனால் 46 ரன்களுக்கு 3 விக்கெட் என இந்திய அணி தடுமாறிக் கொண்டு இருந்தது. கடைசி ஓவர்களில் தீபக் ஹூடா – அக்சர் படேல் இணை அதிரடியாக விளையாடியதால் 20 ஓவர்களில் 162 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி எட்டியது.போட்டி தொடங்குவதற்கு முன்பாக சுப்மன் கில், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பேட்டிங்கில் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். அவர்களின் ஆட்டத்தில் சிக்சரும், பவுண்டரியும் பறக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து அவர்கள் வெளியேறினர்.இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை இஷான் கிஷன் கொடுத்தார். அதனை சுப்மன் கில், சூர்ய குமார், சஞ்சு சாம்சன் ஆகியோர் பயன்படுத்த தவறினர். இதனால் கேப்டன் பாண்ட்யா, ஹூடா, அக்சர் படேல் ஆகியோருக்கு நெருக்கடி அதிகரித்தது.சிங்கிள் டிஜிட்டில் நடையைக் கட்டிய மூவரில் ஒருவர் சிறப்பாக விளையாடியிருந்தாலும் இந்திய அணி 180+ ஸ்கோரை எட்டியிருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement