ஜப்பான் பயணமாகிறார் இந்திய பிரதமர். 

அடுத்த வாரம் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஜப்பான் பயணமாக உள்ளதாக அறியப்பட்டுள்ளது. ஜப்பானின் முன்னாள் பிரதமர் shinzo அபேயின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காக இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பயணத்தின் போது ஜப்பானின் தற்போதைய பிரதமர் fumio கிஷிடாவை சந்தித்து கலந்துரையாடவும் உள்ளார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதிக்கிரியைகள் எதிர்வரும் செப்டம்பர் 27ஆம் திகதி, டோக்கியோவில் உள்ள Nippon Budokan இடத்தில் அரச மரியாதையுடன் முழுமையான அரச நிகழ்வாக நடைபெறும் என ஜப்பான் உள்நாட்டு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

கடந்த ஜூலை 8 ஆம் திகதி shinzo அபே துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்ததோடு, இதற்காக இந்தியாவில் ஒருநாள் துக்க தினம் அனுஷ்டிக்கபட்டிருந்தது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் ஜப்பானில் இரண்டாவது அரச இறுதி மரியாதை நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை