இந்திய பெண்கள் மற்றும் இலங்கை பெண்களுக்கு இடையேயான முதல் ரி -20 போட்டி நேற்று நடைபெற்றது .
இதில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய பெண்கள் அணி துடுப் பாட்டத்தை தெரிவு செய்தது .
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 138 ஓட் டங்களை பெற்றது . அதிகப்பட்சமாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் 36 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார் . அதிரடியாக விளையாடிய தீப்தி வர்மா 8 பந்தில் 17 ஓட்டங்களை பெற்றார் .
139 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்றஇலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது .ஒரு ஓட்டத்தை பெற்றுக் கொள்ள முன்னரே ஒரு விக்கெட்டை இலங்கை அணி பறிகொடுத்தது . நிதானமாக விளையாடிய சாமரி அதபத்து – ஹர்ஷிதா மாதவி ஆகிய இருவரின் விக்கெட்டை ஒரே ஓவரில் ராதா யாதவ் வீழ்த்தினார் .
அடுத்து வந்த வீராங்கனைகள் நிலாக்ஷி டி சில்வா 8 , காஞ்சனா 11 ஓட்டங்களுடன் வெளியேறினார்கள் . ஒரு முனையில் வெற்றிக்காக போராடிய கவிஷா தில் ஹாரி 47 ஓட்டங்களை பெற்று கடைசி வரை களத்தில் இருந்தார் .
20 ஓவர் முடிவில் இலங்கை பெண் கள் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 104 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது . இதனால் இந்திய அணி 34 ஓட்டங் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .
இந்திய அணி தரப்பில் ராதா யாதவ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார் . இரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது ரி -20 போட்டி நாளை சனிக்கிழமை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது .
பிற செய்திகள்
- திருகோணமலை IOC நிலையத்தில் பதற்றம்! (படங்கள் இணைப்பு)
- பொருளாதார தடைகள் உலகை ஆயுத அடிமையாக்குகிறது! சீன அதிபர்
- கறுப்பு சந்தை வியாபாரிகளால் யாழ் இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது! அங்கஜன் காட்டம்!
- அரச ஊழியர்கள் தனியார் துறையில் பணியாற்ற முடியுமா?
- ராயல் பார்க் கொலையாளியிடம் பணம் பெற்றது யாரோ! பழி எனக்கா? மைத்திரி ஆவேசம்
- வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka