• Sep 29 2024

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வது தொடர்பில் வெளியான தகவல் SamugamMedia

Chithra / Mar 4th 2023, 7:21 am
image

Advertisement

2021 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அல்லது அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி, தேவையான சட்ட ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகளை தயாரிப்பது தொடர்பில் இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகன பதிவு திணைக்களம் மற்றும் நிதி அமைச்சுக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதன்போது, மோட்டார் வாகனப் பதிவு, ஒழுங்குமுறை, சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் மற்றும் வீதிப் பாதுகாப்பு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்கள் குறித்து கூட்டத்தின் கவனம் செலுத்தப்பட்டது என இராஜாங்க அமைச்சர் சேமசிங்க டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் பிற கார்களின் பயன்பாடு தொடர்பான காலாவதியான முறைகளுக்குப் பதிலாக புதிய முறைகளைத் தயாரிக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதிலும் இன்று முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள், நாட்டில் இருக்கும் போது வாகனங்களை ஓட்டுவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறையை மேலும் வினைத்திறனாக்குவது குறித்தும் இன்று கலந்துரையாடப்பட்டது.

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வது தொடர்பில் வெளியான தகவல் SamugamMedia 2021 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அல்லது அசெம்பிள் செய்யப்பட்ட வாகனங்களை பதிவு செய்வதற்கான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி, தேவையான சட்ட ஏற்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகளை தயாரிப்பது தொடர்பில் இந்த கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.மோட்டார் வாகன பதிவு திணைக்களம் மற்றும் நிதி அமைச்சுக்கு இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன்போது, மோட்டார் வாகனப் பதிவு, ஒழுங்குமுறை, சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கல் மற்றும் வீதிப் பாதுகாப்பு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படும் சீர்திருத்தங்கள் குறித்து கூட்டத்தின் கவனம் செலுத்தப்பட்டது என இராஜாங்க அமைச்சர் சேமசிங்க டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.அத்துடன் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் பிற கார்களின் பயன்பாடு தொடர்பான காலாவதியான முறைகளுக்குப் பதிலாக புதிய முறைகளைத் தயாரிக்கும் நோக்கத்துடன் முன்வைக்கப்பட்ட 2023 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதிலும் இன்று முக்கிய கவனம் செலுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள், நாட்டில் இருக்கும் போது வாகனங்களை ஓட்டுவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறையை மேலும் வினைத்திறனாக்குவது குறித்தும் இன்று கலந்துரையாடப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement