• Mar 29 2024

நாட்டின் நிலக்கரி இருப்பு மற்றும் தேவைகள் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

Chithra / Jan 25th 2023, 8:42 am
image

Advertisement

நாட்டின் நிலக்கரி இருப்பு மற்றும் தேவைகள் குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஒரு புதுப்பிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தை இயக்குவதற்கு தேவையான 33 நிலக்கரி கப்பல்களில்,10 கப்பல்களில் எடுத்து வரப்பட்ட நிலக்கரி இறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஜனவரி மாதத்தில் மேலும் இரண்டு சரக்குகள் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தலா ஏழு நிலக்கரி கப்பல்கள் வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையில் போதிய பணப் புழக்கம் இல்லாமை மற்றும் நிதியளிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக நிலக்கரி சரக்குகளை உரிய நேரத்தில் எடுத்து வருவதில் சவால் உள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் நிலக்கரி இருப்பு மற்றும் தேவைகள் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல் நாட்டின் நிலக்கரி இருப்பு மற்றும் தேவைகள் குறித்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஒரு புதுப்பிப்பை வெளியிட்டுள்ளார்.இதன்படி நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தை இயக்குவதற்கு தேவையான 33 நிலக்கரி கப்பல்களில்,10 கப்பல்களில் எடுத்து வரப்பட்ட நிலக்கரி இறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.ஜனவரி மாதத்தில் மேலும் இரண்டு சரக்குகள் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம் பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் தலா ஏழு நிலக்கரி கப்பல்கள் வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.இலங்கை மின்சார சபையில் போதிய பணப் புழக்கம் இல்லாமை மற்றும் நிதியளிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக நிலக்கரி சரக்குகளை உரிய நேரத்தில் எடுத்து வருவதில் சவால் உள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement