• Apr 20 2024

கொல்லப்படும் அப்பாவிகள்..! பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரம் - சபையில் கடும் வாக்குவாதம் samugammedia

Chithra / May 24th 2023, 12:56 pm
image

Advertisement

வெலிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவேளை ராஜகுமாரி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெறவேண்டும் என எதிர்கட்சிகள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

இந்த விஜயத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து இந்த விவகாரம் சூடுபிடித்தது.

பதுளையை சேர்ந்த தமிழ் பெண்ணிண் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெறும் என பிரதமர் உறுதியளித்துள்ளார் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இந்த விடயத்தை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கொண்டுவந்தவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அவருக்கு ஆதரவளித்தனர்.

இந்த விடயத்தை சாதாரணமாக கருதமுடியாது என தெரிவித்த விமல் வீரவன்ச, இந்த சம்பவம் குறித்து உரிய கவனத்தை செலுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அப்பாவிகள் கொல்லப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.

இது குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறும் என  பிரதமர் உறுதியளித்தார்.

கொல்லப்படும் அப்பாவிகள். பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட பெண் உயிரிழந்த விவகாரம் - சபையில் கடும் வாக்குவாதம் samugammedia வெலிக்கடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டவேளை ராஜகுமாரி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.இந்த சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெறவேண்டும் என எதிர்கட்சிகள் வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.இந்த விஜயத்தை அரசியல்மயப்படுத்த வேண்டாம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வேண்டுகோள் விடுத்ததை தொடர்ந்து இந்த விவகாரம் சூடுபிடித்தது.பதுளையை சேர்ந்த தமிழ் பெண்ணிண் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகள் இடம்பெறும் என பிரதமர் உறுதியளித்துள்ளார் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.இந்த விடயத்தை நாடாளுமன்றத்தின் கவனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கொண்டுவந்தவேளை நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அவருக்கு ஆதரவளித்தனர்.இந்த விடயத்தை சாதாரணமாக கருதமுடியாது என தெரிவித்த விமல் வீரவன்ச, இந்த சம்பவம் குறித்து உரிய கவனத்தை செலுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.அப்பாவிகள் கொல்லப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார்.இது குறித்து உரிய விசாரணைகள் இடம்பெறும் என  பிரதமர் உறுதியளித்தார்.

Advertisement

Advertisement

Advertisement