யாழில் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

யாழ்.மாவட்ட கூட்டுறவுச் சபையின் அங்கத்தரவர்கள் இன்றைய தினம் வருகை தந்து பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ,கூட்டுறவுச் சங்ககங்களை வலுப்படுத்த வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டிருந்ததாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அவை வருமாறு ;

பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள்

ப.நோ.கூ.சங்கங்கள் கடந்த 30 ஆண்டுகால போர்ச்சூழலில் தனது வளங்களை இழந்தமை , அரசின் பொருளாதார கொள்கைகள் , மற்றும் காலத்திற்கு காலம் பல்வேறு அரசியல் ரீதியான அழுத்தங்கள் காரணமாக தற்போது தனது செயற்பாடுகளை வினைத்திறனாக ஆற்றுவதில் சிரமங்களை அனுபவித்து வருவதை தாங்கள் அறிவீர்கள் .

  • எரிபொருள் நிலைய செயற்பாடுகள்

ப.நோ.கூ.சங்கங்களின் வருமானம் ஈட்டும் பகுதியில் முக்கியமான ஒன்றாக இருப்பது ளிபொருள் நிலைய செயற்பாடாகும் . இதன் செயற்பாடுகள் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பான நெருக்கடியால் மேலும் பல அழுத்தங்களையும் , சிரமங்களையும் எதிர்நோக்கி நிற்கின்றது . உதாரணமாக ,

அ ) 1 ) முற்பணம் செலுத்தி எளிபொருள் பெறுதல் .

2 ) தினம் தினம் பல்வேறு அதிகாரிகள் மட்டத்தில் இருந்து வெளிவரும் எரிபொருள் விநியோகம் தொடர்பான சுற்றறிக்கைகள் .

3 ) எளிபொருள் நிலையத்தை மேற்பார்வை செய்வது என்னும் பெயரில் அளவு கடந்த அதிகாரங்களை தம்வசப்படுத்தி கூட்டுறவு நிறுவனங்களின் கட்டமைப்பு , நிர்வாகம் , சட்ட ஒழுங்குகள் , ஜனநாயக உரிமைகள் போன்றவற்றை கேள்விக்குறியாக்கி கூட்டுறவாளர்களை சிறிதேனும் மதிக்காமல் செயல்படும் சில அதிகாரிகளின் போக்கு .

4 ) எரிபொருள் நிலையத்தை முகாமை செய்வதில் கட்டளையின் ஓரினத்தன்மை . ( Unity Of Commanding ) என்பது அர்த்தமற்றதாக காணப்படுவது .

ஆ ) ஆவியாதல் மற்றும் சோர்வுகள்

1 ) பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் வழங்கப்படுகின்ற ஆவியாதல் அளவிற்கு மேல் ஏற்படும் சோர்வுகளை சங்கங்கள் பொறுப்பேற்று நட்டமடைய வேண்டியுள்ளது .

உ + ம் : 33 லீற்றர் ஆவியாதல் வழங்கும் சந்தர்ப்பத்தில் மேலும் 20-30 லீற்றர் வரை குறைவு ஏற்படுகின்றது . இக்குறைபாடு நீண்ட காலமாக சுட்டிக்காட்டப்பட்டு வரும் நிலையில் எந்த முன்னேற்றங்களும் இல்லாமை . 

இ) ளிபொருள் நிரப்பு நிலையத்தில் அத்தியாவசிய சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ” பாதுகாப்பு எல்லை ” இருப்புக்களில் இருந்து வேறு தேவைகளுக்கு விநியோகிக்கும்படி கிடைக்கும் அழுத்தங்கள் .

ஈ) சங்க வாகனங்கள் , சங்க உற்பத்தி பகுதிகளுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் இல்லாமை .

உ ) பிரதேசத்தில் உள்ள விவசாயிகளுக்கு அவர்களது நீர் இறைக்கும் இயந்திரத்தை இயங்க செய்வதற்கான குறைந்தளவு பெற்றோல் தேவைகளை நிறைவு செய்யமுடியாமை .

ஊ )பிரதேசத்தில் ளிபொருளை பயன்படுத்தி செய்யும் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு தேவையான ளிபொருள் விநியோகிக்க முடியாமை .

இவ் விடயங்களை நிவர்த்தி செய்து தருமாறு கோருகின்றோம் .

நுகர்ச்சிப் பகுதி,

கூட்டுறவு அமைப்புக்கள் நியாய விலையில் ( குறைந்த விலையில் ) பொருட்களை மக்களுக்கு விநியோகிப்பதற்காக தற்போது குடாநாட்டிலே பொருட்களை கொள்வனவு செய்வதால் கொள்விலையானது அதிகரித்துக் காணப்படுவதால் நியாயமான விலையில் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்க முடியாத நிலை காணப்படுகின்றது . இப் பொருட்களுக்கான கொள்வனவினை நேரடியாக கொழும்பிலிருந்து கொள்வனவு செய்வதற்குரிய ஒழுங்குகளை செய்து தருவதன் மூலம் நியாயமான விலையில் பொருட்களை மக்களுக்கு வியோகிக்க முடியும் .

1 ) மிகவும் அத்தியாவசியமான பாவனைப் பொருட்களாகிய அரிசி , மா , சீனி , பருப்பு போன்றவற்றை நியாய விலையில் கூட்டுறவுச் சங்கங்கள் விநியோகிக்க வேண்டிய தேவை உள்ளது .

அ ) இப் பொருட்களை கொண்டு வருவதற்கான செலவு குறைந்த வழிமுறைகளை ஏற்படுத்தி தருதல் .
உ + ம் : புகையிரதம் மூலம்

ஆ ) அநேக ப.நோ.கூ.சங்கங்களில் மூடப்பட்டிருக்கும் கிளைகள் திறக்கப்பட வேண்டியுள்ளது . இது தொடர்பில் தங்களால் வழங்கக்கூடிய ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம் .

பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்களை பலப்படுத்தவும் , மக்களுக்கு நியாயமான விநியோக முறைமைகளை செய்யவும் , இதன் மூலம் பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கும் மக்களுக்கு உதவுவதற்கும் கூட்டுறவுத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள தங்களது ஆலோசனைகள் , ஒத்துழைப்புக்களை பெரிதும் எதிர்பார்க்கின்றோம் .

ஆகவே இந்த கலந்துரையாடல் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்திருந்தார்.

பிறசெய்திகள்

RELATED ARTICLES

JOIN OUR GROUPS

அதிகம் படித்தவை