ஐ.பி.எல். இருபதுக்கு இருபது , தொடரின் 58ஆவது லீக் போட்டியில், டெல்லி கப்பிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
மும்பையில் நேற்று இடம்பெற்ற போட்டியில், டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ராஜஸ்தான் அணி சார்பாக ,துடுப்பாட்டத்தில், அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஸ்வின் 50 ஓட்டங்களையும் படிக்கல் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
டெல்லி அணி சார்பில் பந்துவீச்சில், சேட்டன் சக்கரியா, நோட்ஜே மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனை அடுத்து 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி அணி, 18.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், டெல்லி அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
டெல்லி அணி சார்பில் , அதிகப்பட்ச ஓட்டங்களாக, மிட்செல் மார்ஷ் 89 ஓட்டங்களையும் டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சில், ட்ரெண்ட் போல்ட் மற்றும் யுஸ்Nவுந்திர சஹால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளையும் 62 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக 89 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட மிட்செல் மார்ஷ் தெரிவுசெய்யப்பட்டார்.
பிற செய்திகள்
- அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் அதிகரிப்பு
- கோட்டா கோ கம போராட்டத்தின் நினைவுச்சின்னம் திறப்பு- (படங்கள் இணைப்பு)
- ரணில் இன்று பிரதமராக பதவிப் பிரமாணம் செய்வார்! ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தகவல்
- ஜோன்ஸ்டனுக்கு சொந்தமான கால்நடைப் பண்ணை தீக்கிரை
- மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
சமூக ஊடகங்களில்:
- Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
- Twitter: சமூகம் ட்விட்டர்
- Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சமூகம் யு டியூப்