ஆரியின் வாக்குகள் குறைத்து காண்பிக்கப்பட உள்ளதா?பரபரப்பு தகவலை வெளியிட்ட முக்கிய பிரபலம்!

588

பரபரப்பாக ஒளிபரப்பாக்கிக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

எனினும் பல கோடி மக்களின் மனதை வென்ற பிக் பாஸ் போட்டியாளரான ஆரி தான் வெற்றி மகுடம் சூட்டுவார் என மக்கள் அசையா நம்பிக்கை கொண்டுள்ளனர்.

தற்போது, பிக்பாஸ் பைனலில் ஆரி பெற்ற வாக்குகள் குறைத்து காண்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பிரபல இசையமைப்பாளரான ஜேம்ஸ் வசந்தன் பரபரப்புத் தகவலொன்றை தெரிவித்துள்ளார்

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பினாலே இன்று நடைபெறுகிறது.

இதில் ஆரிதான் வின்னர் என நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி வருகிறது. இதேபோல் ஆரி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக ஆரிதான் 27 கோடி வாக்குகள் பெற்று டாப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆரி பெற்ற வாக்குகளை குறைத்து காட்ட விஜய் டிவி திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் தனது கருத்துக்களை பதிவிட்டு வரும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டிருப்பதாவது, உலகமெங்கும் வாழும் தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப் பெற்ற புதுயுகத் தலைவன் ஆரிக்கு 24+ கோடி ஓட்டுகள் வந்ததாகவும், அடுத்த இடத்திற்கு 4+ கோடி ஓட்டுகள் வந்ததாகவும், ஆனால் இந்த அகன்ற வாக்கு வித்தியாசம் மறைக்கப்பட்டு குறைத்து காண்பிக்கப்படப் போகிறது என்றும் பல தளங்களில் தகவல்கள் வெளியாகின்றன.

இது நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்த வந்த தகவல் என்றும் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.

ஆனால், உண்மையாக இருக்க எல்லா வாய்ப்புகளும் உண்டு, உலகமெங்கும் அந்த நேர்மையின் சின்னத்துக்கு இருந்த நம்பமுடியாத ஆதரவைப் பார்க்கும்போது, ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை.. இவ்வாறு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: